புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 

YNB Holdings அறிமுகப்படுத்தும் Arazyme தயாரிப்புகள்

YNB Holdings அறிமுகப்படுத்தும் Arazyme தயாரிப்புகள்

கொரியாவின் புகழ்பெற்ற தனித்துவ அரசைம் உற்பத்திகளான சருமம், குளியல் மற்றும் மேனிப் பராமரிப்பு தயாரிப்புகளை வை.என்.பி. ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிட்டெட் அண்மையில் இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சினமன் கிராண்டில் இடம்பெற்ற இந்தக் கோலாகலமான வைபவத்தில் ஊடகத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அதிதிகள் மற்றும் அழகுக்கலைத்துறையைச் சேர்ந்த பல பிரபலமானவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தத் தயாரிப்புக்கள் பிரதானமாக ஐந்து உற்பத்திகளைக் கொண்டுள்ளன. Arazyme Facial Gel, Arazyme Facial Powder, Arasense Black Gold and soap, B.A.L. Foot Care Treatment, Dr. Scalp Hair Treatment ஆகியவையே அவை ஆகும்.

இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் விசேட அம்சங்களைக் கொண்டிருப்பதற்குக் காரணம், இவை ஏனைய இயற்கை மூலப் பொருட்களுடன் சிலந்தியிலிருந்து சுரக்கும் ஒரு வகை திராவத்தையும் கொண்டுள்ளன. அரசைம் என்ற பெயரில் அடங்கியுள்ள அர Ara’ என்ற சொல் லத்தீன் மொழியில் சிலந்தியைக் குறிக்கின்றது. என்சைம் எனப்படுவது உயிரியல் தொழிநுட்ப உற்பத்தியைக் குறிக்கின்றது. இதன்படி, இயற்கை சாரங்களையும் நச்சுப் பொருட்கள் உள்ளடங்காத மூலப் பொருட்களையும் கொண்டுள்ள இந்த உற்பத்திகள் சருமத்தை ஆற்றுப்படுத்தி புதுப்பிப்பதுடன் ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்றதாக உள்ளது.

முகத்துக்கான அரசைம் ஜெல் மற்றும் பவுடர் ஆகியவை முகத்திலுள்ள கெரட்டின் படையை மெதுவாகக் கரைத்து இறந்த கலங்களை அகற்றுவதன் மூலம் மாசுமறுவற்ற, பளபளப்பான, ஆரோக்கியமான சருமத்தைப் பெற்றுக் கொடுக்கின்றது. அரசென்ஸ் கரும் சவர்க்காரம் (Arasense Black Soap) சருமத்தில் ஆழ ஊடுருவி தூய்மைப்படுத்துவதால் கெரட்டின் படிவு ஏற்படுவதைத் தடுக்கின்றது.

அரசென்ஸ் கோல்ட் சவர்க்காரம் (Arasense Black Soap) ஆனது சருமத்தில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து மேனியின் ஈரலிப்பைப் பேண உதவுகின்றது. பி.ஏ.எல். பாதப் பராமரிப்பு உற்பத்தியானது (B.A.L. Foot Care) சருமத்தின் மேற்பரப்பில் உள்ள இறந்த கலங்களை அகற்றி அதனைப் புதுப்பிப்பதுடன் அதனை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றது. மேலும் விளையாட்டு வீரர்களின் உட்பாதத்தில் உருவாகும் கால் ஆணிகளை மறையச் செய்து பாதங்களில் பங்கசு படிவதனால் உருவாகும் துர்மணத்தையும் தடுக்கின்றது. இவற்றுடன் மண்டை ஓட்டின் இரத்த ஓட்டத்தை சிறப்பாகப் பேணி அதன் துவாரங்களைத் தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றது.

டாக்டர் ஸ்கல்ப் ஹெயார் ட்ரீட்மென்ட் ஷம்பூ (Dr. Scalp Hair Tratment) முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றது. சுருக்கமாகச் சொன்னால் மேனிக்கு வேண்டிய சகல பராமரிப்பையும் இந்த நவீன தயாரிப்புகள் வழங்குகின்றன. “இயற்கை பதார்த்தங்களிலிருந்து தயாரிக்கப்படும் பல வகையான சோப் வகைகளும் கிளென்சர்களும் உள்ளன” என்று கூறும் வை.என்.பி. ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லீ “ஆனால் இத்தயாரிப்பு மிகவும் வித்தியாசமானது. இது சிலந்தியிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. அசுத்தமான பொருட்களை நீக்கி தூய்மையான பதார்த்தங்களை சுரப்பதன் மூலம் மேற்பரப்பை சுத்தமாகப் பேணுவதற்கு உதவுகின்றது” என்றார். கொரிய அரசாங்கத்தின் உற்பத்திச் செயன் முறைக்கான சான்றிதழ் பெற்ற அரசைம் தயாரிப்புகள் 26 நாடுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.