புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 

தரம் வாய்ந்த லேசர் பிரின்டர் தீர்வுகளை அறிமுகப்படு;த்தும் R&G Capital Pvt Ltd

தரம் வாய்ந்த லேசர் பிரின்டர் தீர்வுகளை அறிமுகப்படு;த்தும் R&G Capital Pvt Ltd

R&G கப்பிட்டல் பிறைவேட் லிமிட்டெட், இலங்கையில் லேசர்toner களை உற்பத்தி செய்யும் ஒரு முன்னணி நிறுவனம். இது உயர்தரம் வாய்ந்த லேசர் பிரின்டர்களான HP, Lexmark, Samsung, Canon  ஆகியவற்றின் toner தேவைகளுக்கு ஒரு சிறந்த Total Laser Care (TLC) தீர்வை முன்வைத்துள்ளது.

இதன்படி R&G நிறுவனம் குறைந்த செலவிலான இரண்டு தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு முன்வைத்துள்ளது. பற்றுறுதியை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தம். மற்றையது நீங்கள் அச்சுப் பிரதி செய்யும் போதே கட்டணம் செலுத்தும் வாய்ப்பு. பற்றுறுதியை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் toner கார்ட்றிஜ்களை 30 வீத கழிவில்R&G கப்பிட்டலிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

இதனை விட உங்கள் வியாபார முயற்சிகள் எதுவித தடையுமின்றி செல்வதற்கு விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு சேவைகளையும் இந்நிறுவனம் வழங்குகின்றது. பிரின்டர்களின் உத்தரவாத காலப்பகுதி நிறைவடைந்த பின்னரும் பிரின்டர் பழுதடையும் பட்சத்தில் அதனைத் திருத்த வேலைகளுக்காகக் பொறுப்பெடுக்கும்போது பதிலீடாக இன்னொரு பிரின்டர் வழங்கவும்R&G ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.

இரண்டாவது தெரிவின் பிரகாரம், வாடிக்கையாளர் தான் அச்சுப் பதிக்கும் தாள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து விலை செலுத்த முடியும். உதாரணமாக 1,000 பக்கங்கள் மட்டும் அச்சுப் பதித்தால் அதற்குரிய கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும். இதன்படி பிரின்டர் மற்றும் லேசர்toner கார்ட்றிஜ்களை R&G யிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பொழுது அச்சுப்பதிக்கும் தாள்களுக்கான விலை மட்டும் செலுத்தினால் போதுமானது. இதனால் வாடிக்கையாளர்கள் முதலீடு பற்றியோ அல்லது முதல் பற்றியோ கவலையடையத் தேவையில்லை.

நியம சோதனை முறைமைகள் குழுவினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் (Standardized Test Methods Committee) பெற்றுள்ள இலங்கையைச் சேர்ந்த முதலாவது நிறுவனம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. R&G கப்பிட்டல். சிக்கனமானதும் இலாபத்தை உச்சளவில் பெற்றுத்தரக் கூடியதுமான ஒரு தெரிவு இது. உண்மையில் அதிகளவில் பிரின்டர்களின் தொழிற்பாடு வேண்டப்படும் துறைகளான நிதித்துறை மற்றும் ஆடைக் கைத்தொழிற் துறைகளுக்கு இத்தெரிவு மிகவும் பயனுள்ளதாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. 1988 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் இத்துறையில் ஆழமான அனுபவத்தைக் கொண்டிருப்பதன் காரணமாக அச்சுப் பதிக்கும் துறைக்கு தனித்துவம் வாய்ந்த முன்னேற்றமான தீர்வுகளை R&G அறிமுகப்படுத்தக்கூடியதாகயிருந்தது. இதற்கு மேலதிகமாக தற்போதைய போட்டிச் சந்தையின் போக்கை நன்கு விளங்கிக் கொண்ட இந்நிறுவனம் பொருத்தமான தருணத்தில் பொருத்தமான தீர்வுகளை முன்வைத்துள்ளது.

R&G நிறுவனம் நாடளாவிய ரீதியில் வத்தளை, நுகேகொடை, கொட்டஹேன, கண்டி, குருநாகல், மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பல்வேறு இடங்களில் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. அது மட்டுமன்றி வாடிக்கையாளர்கள் அனுப்பும் பொருட்களுக்கான கட்டளைகளை உடனும் விநியோகிப்பதற்காக சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற “UPS Courie” நிறுவனத்துடனும் இணைந்து செயற்படுகின்றது. இதனால் தயாரிப்புகளை சேமித்து வைக்க வேண்டிய தேவையோ சேமித்து வைப்பதில் உருவாகும் நட்டங்களோ ஏற்படமாட்டாது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.