புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 

1,866 மில்லியன் ரூபாய் போனஸ் வழங்கும் சிலிங்கோ லை/ப்

1,866 மில்லியன் ரூபாய் போனஸ் வழங்கும் சிலிங்கோ லை/ப்

மூன்று இலட்சத்து 48 ஆயிரம் ஆயுள் காப்புறுதி பத்திர உரிமையாளர்களுக்கு மொத்தம் 1,866 மில்லியன் ரூபாவை இம்மாதம் வழங்கவுள்ளது. ஆயுட் காப்புறுதித் துறை முன்னணி நிறுவனமான செலிங்கோ லைப் நிறுவனம் அதன் நீண்ட கால வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வருடாந்த போனஸ், போனஸ் சான்றிதழாகவும் பணமாகவும் அமையும்.

339,368 காப்புறுதிப் பத்திர உரிமையாளர்களுக்கு 1,834 பில்லியன் ரூபாய் பெறுமதியான போனஸ் சான்றிதழ்கள் ஏப்ரல் 2ம் திகதி முதல் அனுப்பப்பட்டு வருகின்றன. மிகுதியான 9088 காப்புறுதி தாரர்களுக்கு 10, 15, 20 வருடங்கள் நிறைவு பெற்றவர்களுக்கு ரூபா 31.9 மில்லியன் ரூபா பண போனஸ்களை தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வழங்கப்பட்டன.

இவ்வாண்டு போனஸ் கொடுப்பனவுகள் 2011ம் ஆண்டை விட 244 மில்லியன்களால் அல்லது 15.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. போனஸ் பெறுபவர்களின் தொகை 29,638 பேரால் அதிகரித்துள்ளதாக ரணசிங்க மேலும் தெரிவித்தார். காப்புறுதி பத்திர உரிமையாளர்களுக்கு முதல் வருடம் முதலே போனஸ் வழங்கும் நிறுவனத்தின் நடைமுறை காரணமாக டிசம்பர் 2011ல் காப்புறுதி பத்திரத்தைப் பெற்ற வாடிக்கையாளரொருவருக்குக் கூட அவ்வாண்டு டிசம்பர் 31ல் போனஸ் கொடுப்பனவை பெறக் கூடியதாகவுள்ளது.

நிறுவனத்துடன் இருபது ஆண்டுகளை டிசம்பர் 31ம் திகதி பூர்த்தி செய்தவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட ஒவ்வொரு ஆயிரம் ரூபாவுக்கும் ரூபா 75ம் 15 ஆண்டுகளை பூர்த்தி செய்தவர்களுக்கு ரூபா 50ம் பத்தாண்டுகளை பூரத்தி செய்தவர்களுக்கு ஒவ்வொரு ஆயிரம் ரூபாவுக்கும் 25ம் போனஸாக வழங்கப்படவுள்ளது.

இந்த வகையில் ஒரு மில்லியன் உத்தரவாதமளிக்கப்பட்ட 10 வருடத்தைப் பூர்த்தி செய்த காப்புறுதிப் பத்திர உரிமையாளர் ஒருவர் பண போனஸாக 25,000 ரூபாவையும், 15 வருடத்தைப் பூர்த்தி செய்தயொருவர் 50,000 ரூபாவையும் 20 வருடத்தை பூர்த்தி செய்தவொருவர் 75,000 போனஸாகப் பெறுவார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.