புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 

இலங்கையின் முதல் Lotus Roots விருதினை பெற்ற JWT

இலங்கையின் முதல் Lotus Roots விருதினை பெற்ற JWT

பாங்கொக் நகர பட்டாயாவில் அண்மையில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டின் Adfest  விளம்பரப்படுத்துதல் விருது வழங்கும் விழாவில் JWT நிறுவனம் இலங்கையின் முதல் Lotus Roots விருதினை வென்று விளம்பர வரலாற்றில் கால் தடம் பதித்துள்ளது. ஆசிய பிராந்திய JWTகிளை நிறுவனங்கள் இவ்விருது விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றதுடன் இலங்கையில் JWT வென்ற இவ்விருது ஏனைய விருதுகளை விட மதிப்புமிக்க அதி உன்னத விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Adfest விருது விழாவின் இவ் Lotus Roots விருது, ஆசியாவின் பாரம்பரியம், வரலாறு மற்றும் உள்ளூர் கலாசார மரபுகளை சிறந்த முறையில்வெளிப்படுத்தும் படைப்புகளுக்காக வழங்கப்படும் அதி உன்னத விருதாகும்.

கொழும்பு JWT நிறுவனம் வென்ற இவ் விருதானது. Care International  நிறுவனத்திற்காக பெண்களுக்கெதிரான வன்முறைகளை வெளிப்படுத்தும் வெசாக் தோரண நிர்மாணத்திற்காக வழங்கப்பட்டதாகும். JWT நிறுவனத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இவ் வெசாக் தோரணம் பாரம்பரிய ஓவியக் கலையை கையாண்டு, புத்தமத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சமத்துத் தகவல்களை சமூகத்திற்கு எடுத்துக் காட்டும் வகையில் வழங்கியிருந்தது. கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட 2600வது சம்புத்த ஜயந்தி நிகழ்விற்காக நிர்மாணிக்கப்பட்டமை இதன் மற்றுமொறு சிறப்பம்சமாகும்.

இது குறித்து JWT நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமை உருவாக்கல் அதிகாரி திருமதி சாந்தனி ராஜரட்ணம் கருத்து வெளியிடுகையில் Lotus Roots மூலம் ஆசியாவின் பாரம்பரிய கருத்திற்கும் எண்ணங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இதுவரை வென்றிடாத அதி உயர் விருதினை நாம் வென்றதன் மூலம் இலங்கை விளம்பர நிறுவனத் துறைக்கும் இலங்கைக்கும் பெருமையை தேடித்தர முடிந்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

Adfest விருது வழங்கும் விழா என்பது ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் விளம்பரத் துறையின் தரம் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தப்படுத்துவதற்கும் விளம்பர நிறுவனங்களுக்கு தமது படைப்புகளை முன்னிலைப்படுத்துவதற்கும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஆண்டு தோறும் நடாத்தப்படும்விளம்பரத் துறையினருக்கான விருது வழங்கும் விழாவாகும். ஆசிய பிராந்தியத்தில் விளம்பரத் துறையில் தொழிற் புரியும் ஆசியர்களுக்கு தம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரே பிராந்திய விருது விழா இதுவாகும். இவ் விருது விழா படைப்பாற்றலை மதிப்பீடு செய்யும் விழா மாத்திரமின்றி இதில் கலந்து கொள்வோருக்கு பிராந்தியத்தின் அனைத்து படைப்புகளையும் காணக் கூடியதாகவும் நிபுணர்களின் கருத்தரங்கு சொற்பொழிவுகளில் கலந்து கொள்வதற்கும் பங்கு பெறுவோருடன் கருத்து பரிமாற்றம் செய்வதற்கும்வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

JWT Colombo நிறுவனம் WPP குழுமத்தின் பங்குதாரர் என்பதுடன் இலங்கையின் 100 சதவீத சர்வதேச நிறுவனமாகும். அத்துடன் இந்நிறுவனம் விளம்பரம், மக்கள் தொடர்புகள், செயற்பாட்டு நடவடிக்கைகள் வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த நிபுணத்துவ சேவைகளை இலங்கையில் வழங்கி வருகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.