புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
முஸ்லிம் மாதர்களுக்கு

முஸ்லிம் மாதர்களுக்கு

ஓர் பாராளுமன்ற ஒன்றியம்

இந்தோனேஷிய குடியரசின் சுமாத்திரா தீவின் தலைநகரான பாலெம்பாங் (Palembang) நகரத்தில் இந்த மாதர் இயக்கம் மலர்ந்தது.

முதலாவது மாதர் மகாநாடு

சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் பாராளுமன்றங்களில் அங்கம் வகிக்கும் ஏழாவது பாராளுமன்ற மாநாட்டுக்குப் புறம்பாக முஸ்லிம் நாடுகளின் பெண் உறுப்பினர்கள் தமது முதலாவது மாநாட்டை நடத்தினர்.

மாதர் தம் மடமையை நீக்குவோம் என அன்று தமிழுலகம் கண்ட அற்புத நடிகர் என்.எஸ்.கிருஸ்ணன் பாடினார்.

இன்றோ, உலகின் பெண்களின் மடமைத்தனம் குறித்து பேசுவதை விட அவர்களின் அறிவின் சிகர த்தை எடைபோடுவது மட்டுமல்ல பெண் உரிமை, ஆண்களோடு சரி சமமான அந்தஸ்து, போன்றவற்றையே உலகம் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டது. இந்த வீச்சின் விசிறிய கதிர்களைத்தான் நாம் “பாலெம் பாங்” மாநாட்டில் கண்டோம்.

முதலாவது முஸ்லிம் பெண்களின் பிரகடனம்

முஸ்லிம் பெண்களின் பொற்குகையாக ஒரு பிரகடனத்தைத்தான் உலக முஸ்லிம் பெண்கள் பாராளுமன்ற ஒன்றியம் முதன் முதலாக வெளியிட்டது.

எமக்கு முஸ்லிம் உலகம் உரிய அந்தஸ்தை வழங்கத் தவறிவிட்டது என்று ஓசை எழுப்புகின்ற இந்தப் பிரகடனம் “இனியும் இடம் தரோம்” என்று அடித்துக் கூறுகின்றது.....

அப்பப்பா....... என்ன எழுச்சி என்ன வீராப்பு.

“தத்தமது நாடுகளில் அரசியல் வாழ்வில் எம்மை இறுக இணைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாங்களும் உலகப் பிரஜைகளாவோம். இது குறித்து முஸ்லிம் நாடுகள் மேலும் சிந்திக்க வேண்டும். இறுக்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டும்” என்றும் ஒரு இறுக்கமான வேண்டுகோளை யும் இங்கு விடுக்கின்றது.

‘தேசிய ஜனநாயக வாழ்விலும் நாடுகளின் அபிவிருத்தியிலும் இப்போதையதைவிட மிகச் சிறப்பான பங்களிப்பை மாதர்குலம் அளிக்க முடியும்’ என்ற உறுதிமொழியையும் அழுத்தமாகச் சொல்கிறது இந்த உலக முஸ்லிம் மகளிர் பிரகடனம்.

அவர்களுடைய இந்த உறுதிப்பாட்டுக்குக் காரணம் என்ன தெரியுமா?

இப்பிரகடனத்தின் மூலமே அறிந்து கொள்வோமே, ‘பொது வாழ்வில் அவர்களோடு ஒத்த சந்தர்ப்பத்தை அல்குர்ஆன் உறுதிப்படுத்துகின்றது.

“கல்வி, தொழில்துறை, வியாபாரம் இன்ன பல துறைகளாகிய ஆண்கள் பெறுகின்ற அதே உரிமையைப் பெண்களுக்கும் உறுதிப்படுத்த வேண்டும். உயர்கல்வி பெறுவதற்கும் கல்வியில் அனைத்துத் துறைகளிலும் பாரிய முன்னேற்றங்களை அடைவதற்கும் அவர்கள் தம் பொறுப்பு அத்தனைகளையும் தரவேண்டும். ஏன் தெரியுமா? அடுத்த தலைமுறைக்கான கால்கோளை நாட்டுவது நாம்தாம்.....”

“பெண்ணே, கேட்டோம்! என்று இவ்விடத்தில் எம்மனம் நிசப்தமாக சொன்னது.

பிரகடனம் மேலும் விரிவடைகிறது....

“மனுக்குலம் உயர்வு காண தீர்வுகளை எடுக்கும்போது பெண்களையும் சேர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். உலக மாந்தர் வாழ்வில் உயர்ந்த காலம் இது. முக்கியமாக, எம்மை மறந்துவிட முடியாது. சர்வதேச இஸ்லாமியக் கூட்டமைப்பு இது விடயத்தில் நன்கு கருத்தெடுத்துப் பணியாற்ற வேண்டுமென நாம் அனைத்து முஸ்லிம் நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம்.....”

ஒன்றை எடுத்து மற்றதை விட்டுவிட்டால் வாழ்வில் பயன்காண முடியாது என்பதையும் இந்தப் பிரகடனம் சுட்டிக்காட்டுகிறது.

‘உலகத்தின் பாதி எம் சாதி. இப்பாதியைப் பயன்படுத்தா விட்டால் ஜனநாயகப் பரிணாமம் வளர்ச்சிகாணாது.”

பெண் கொடுமை மிகப் பாவமானது. பெண்களுக்கு ஜனநாயகம் இல்லை என்றால் உண்மை ஜனநாயகத்தை அரங்கேற்ற முடியாது. ஜனநாயக வழிமுறைகள் தழைத்தோங்க ஆண்பால் - பெண்பால் வேற்றுமை காட்டக்கூடாது. அனைத்து அபிவிருத்திப் பணிகளிலும் பெண்களின் பங்கு சாமர்த்தியமாக சமப்படுத்தப்பட செய்தல் வேண்டும்.

இம்மட்டில் விட்டார்களா.......!

இதோ இன்னொரு குண்டு

எதிர்காலத்திலும் முஸ்லிம் மகாநாடுகளில் நாம் நிச்சயம் கலந்து கொள்ள வாய்ப்பேற்படுத்துங்கள்?

“எதிர்காலத்தில் நீங்கள் நடத்த இருக்கும் பாராளுமன்ற ஒன்றியக் கூட்டங்களில் போதியளவு பெண் பிரதிநிதிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முஸ்லிம் பாராளு மன்ற உறுப்பினர் களை நாம் கேட்டுக்கொள் கிறோம். அத்துடன் இந்தப் பாராளுமன்ற ஒன்றியத்தின் யாப்பினை திருத்தியமைத்து முஸ்லிம் மகளிர் பாராளுமன்ற ஒன்றியத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். உங்கள் வருடாந்த மாநாடு நடைபெறும் பொழுது மகளிர் பாராளுமன்ற ஒன்றியத்தின் வருடாந்த கூட்டத்தையும் நடத்த ஒழுங்கு செய்து தரவேண்டும். அத்துடன் உங்கள் பாராளுமன்ற நிறைவேற்றுக் குழுவில் சமநிலையான பிரதிநிதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.....”

ஒவ்வொரு நாடும் அல்குர்ஆன் போதிக்கும் முஸ்லிம் பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பளித்துப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இது வல்லாதவிடத்து. அந்தந்த அரசாங்கங்கள் இதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்லாம் கூறும் பெண்ணுரிமையைப் பேணுங்கள்.

பெண்கள் உரிமை சம்பந்தமாக இஸ்லாம் போதிக்கும் வழிமுறைகளை நவீன உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். அத்துடன் பெண்களுக்கு எதிரான அனைத்துக் கெடுபிடிகளையும் தீர்த்துக் கட்டுவதற்கும் சர்வதேச சாசனத்தின் (விரிளிதிதீ) பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நாங்கள் உங்களுக்கு இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.

இது மட்டுமா, இவர்கள் வேண்டுவது

மேலும் தொடர்கிறார்கள், மேற்குலக நாடுகளின் பாராளுமன்றப் பெண் உறுப்பினர்களோடு தொடர்பினை ஏற்படுத்த ஒரு புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இஸ்லாம் கூறுகின்ற பெண் உரிமையின் தத்துவார்த்தங்களை அவர்களுக்கு யதார்த்தபூர்வமாக எடுத்துச்சொல்ல வழிபிறக்கும்.

இஸ்லாம் சம்பந்தமான தப்பபிப்பிராயங்களைப் போக்குவதற்கு சர்வதேச ரீதியில் செய்மதி தொலைக்காட்சி(ஷிatலீllitலீ விhannலீl) அலைவரிசையின் மூலம் கோள அலைவரிசையை ஏற்படுத்துவது மிக்க பயன்தரும். இது ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளிலும் கிராம மட்டத்தில் சமூகப் பரம்பலில் வேண்டிய அழுத்தங்களை ஏற்படுத்த ஏதுவாகும்.

உலகில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்த வேண்டுமா?

அப்படியாயின் பெண்களுக்கே உரித்த தனித்தன்மை, பெண்களுக்கே பிறந்த தனித்தன்மைகளை நன்கு பயன்படுத்தி அதன் மூலம் உலகத்தில் ஏற்படும் முறுகல் நிலை, சண்டை சச்சரவுகள், பிரிவினைகள் போன்றவற்றை நாம் எளிதில் களைய உதவலாம்....”

பெண் பார்வையில் பலஸ்தீனப் பிரச்சினை, பெண்கள் நோக்கும் பார்வை

ஆக்கிரமித்துள்ள மேற்குக்கரை, காஸா எல்லை ஆகிய இருவித பரிணாமங்களை பெற்றுள்ளது. பலஸ்தீன ஆண்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து தொழில்புரிகின்றனர். மீதமுள்ளோர் நாட்டின் விடுதலைக்காக வேண்டிப் போராடி வருகின்றனர். இந்த நிலையில் பலஸ்தீனப் பெண்களின் பங்கு விசேட பரிமாணத்தைப் பெருகின்றது. முன்பெல்லாம் ஆண்கள் வகித்த பொறுப்புகள் பெண்கள் இப்போது தலையில் சுமத்தப்படுகின்றன.”

கும்பப் பாரம் குறிப்பாகப் பிள்ளைகளைப் பராமரிப்பது. அவர்களின் கல்வி, சுகாதார நலன்களைப் பேணிப் பாதுகாப்பது இன்னோரன்ன விடயங்களின் பெண்கள் வகிக்கும் பங்கு மாறுபட்டு நிற்கின்றது. தாய்மார்களின் இந்த வேறுபட்ட தனித்தன்மையுள்ள பொறுப்புக்களை கவனத்தில் எடுத்துக் குறிப்பாகப் பலஸ்தீனப் பெண்களின் நலன்காக்க சர்வதேச இஸ்லாமிய நாடுகள் முன்வருவது மிக்க விரும்பற்பாலது.

ஸயோனிசவாதிகளின் கொடுமை

”1976 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஸயோனிச ஆக்கிரமிப்பின் காரணமாக சிறியாவில் கோலான் எல்லையில்(மிolan சிight) பெண்களும் சிறுமியர்களும் அனுபவிக்கின்ற சொல்லொணாத் துன்பங்களையும் துயரங்களையும் நீக்குவதற்கு ஐ.நாடுகளின் தீர்மானங்களை அமுல் நடத்துவதற்கு இஸ்ரேல் மீது அழுத்தங்களுக்கு மேல் அழுத்தங்கள் கொடுப்பதற்கு அனைத்து முஸ்லிம் நாடுகளும் முன்வர வேண்டுமென்று நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்பதையும் இந்த உலக முஸ்லிம் பெண் பாராளுமன்ற ஒன்றியம் வலியுறுத்திக் கூறுகின்றது.

உலக முஸ்லிம் பெண்களின் குரல் அவ்விதம் வான்முட்ட ஓசை எழுப்பும் போது அதற்கு மேல் விசை கொடுப்பதற்கு முக்கியமான ஒரு பெண் மணி இதில் பங்கு கொண்டமையை இங்கு குறிப்பிட வேண்டும்.

முஸ்லிம் நாட்டில் முஸ்லிம் அல்லாத ஒருவர் சபாநாயகர்

இந்த முஸ்லிம் மாதர் பாராளுமன்ற ஒன்றியத்துக்கு உந்து சக்தி வழங்குமாற்போல் இன்னுமோர் பெண்ணின் பங்களிப்பை இதில் விசேடமாக குறிப்பிட வேண்டும். அவர்தான் அல்பேனிய நாட்டைச் சேர்ந்த ஜொசபினா டொபல்லி நிலிZரிபியினிதி ஹிலி ஜிதிழிழியி இவர் அல்பேனிய நாட்டின் சபாநாயகர் ஆவார். இவர் ஒரு முஸ்லிம் அல்ல. எனினும் முஸ்லிம் நாடான அல்பேனியா பெண்களுக்கு சமூக அரசியலில் வாழ்வில் அளித்துள்ள அந்தஸ்தினை விளக்குவதற்குப் பாராளுமன்றத்தில் இந்த முக்கிய பதவி அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது.

நாடுகளுக்கிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் ரவூப் ஹக்கீ மும் நானும் நடத்திய சங்கிலித் தொடர்பு கருத்துப் பரிமாற்றத்தில் ஒரு முக்கியமான இடமாக இந்த சந்திப்பு அமைந்தது கூறலாம்.

இந்த அல்பேனிய நாட்டு பெண் சபாநாயகருக்கு ஒரு ஆசை! அது என்ன? பின் சொல்வேன்...

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.