புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 

லபுக்கலை தேநீரை ருசித்த இளவரசர் சார்ள்ஸ்

லபுக்கலை தேநீரை ருசித்த இளவரசர் சார்ள்ஸ்

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இலங்கைக்கு வந்திருந்த இளவரசர் சார்ள்ஸ் மலையகத்திற்கு விஐயம் மேற்கொண்டிருந்தார். கண்டி நகரில் பல இடங்களை பார்வையிட்டதன் பின்னர் நுவரெலியாவிற்கு விஐயம் செய்த இளவரசர், நுவரெலியாவிலுள்ள விN'ட தேவை யுடையோர் பாடசாலைக்கு விஜயம் செய்தார். அங்குள்ள மாணவர்களைச் சந்தித்து உரையாடியதுடன் அவர்களுடன் சேர்ந்து பாடினார். லபுக்கலை தோட்டத்திற்கு விஜயம் செய்த இளவரசரை பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகரின் உறவினர்கள் உட்பட மெக்வுட்ஸ் கம்பனி அதிகாரிகள், மற்றும் தோட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இலங்கையின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அன்று அவரின் பிறந்த தினத்தையொட்டி கேக் ஒன்று வெட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெண்கள் கொழுந்து பறிக்கும் இடத்திற்கு சென்றார். பெருந்தோட்டப் பெண்கள்;. பட்டுச் சேலையணிந்து நவீன கொழுந்து கூடையுடன் காணப்பட்டனர்.

 

அப்போது கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணொருவரிடம் பெயர் விபரங்களை கேட்டறிந்தார். லபுக்கலை தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேயிலை நூதன சாலையையும் திறந்து வைத்தார். அங்கு பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நூதன சாலையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அவரது தாயாரின் உருவப்படமும் காணப்பட்டது. அமைக்கப்பட்டிருந்த தகவல் தொழில்நுட்ப பிரிவையும் பார்வையிட்டார்.

அங்கு தோட்ட தொழிலாளிகளின் பிள்ளைகளும் கலந்து கொண்டமை ஒரு விN'ட அம்சமாகும். பின் தேயிலை மாதிரிகளை ருசித்து பார்க்கும் இடத்திற்கு சென்றார். அங்கு பல தரப்பட்ட தேயிலைத் தூள்களை ருசித்த இளவரசர் ஒருமாதிரியாக தனக்கு பிடித்த சுவையொன்றை தெரிவு செய்து ருசித்;தார். பிரித்தானியாவில் இலங்கை தேயிலையை குறிப்பாக லபுக்கலை தோட்ட தேயிலை என்றால் மிகவும் பிரியமாம். நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட இளவரசர் சார்ள்ஸ் அனைவருக்கும் கையை அசைத்து விட்டு தோட்டத் பாதையு+டாக பயணமானார்.

சார்ள்ஸ் வருவதற்கு முன்னர் தோட்டம் பல கோடி ரூபாய்களினால் செலவு செய்யப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டிருந்தது. பாதை கள் துப்பரவு செய்யப்பட்டு விN'ட பாதுகாப்பு வேலிகள், வானூர்தி இறங்குதளம், வீட்டு கூரைகளுக்கு வர்ணப்பு+ச்சிகள், பு+ மரங்கள், கலர் கலரான பு+க்கன்றுகள் நாட்டப்பட்டிருந்தன. சுமார் 60 லட்சம் பெறுமதியான விளம்பரப்பலகையும் போடப்பட்டிருந்தன. பெரும்பாலான மக்கள் மலை உச்சிகளில் இருந்து பார்வையிட்டனர். குறிப்பாக இளவரசர் வந்த இடத்திற்கு எவரும் அனுமதிக்கப்படவில்லை.

இலங்கையில் தேயிலை உற்பத்தியில் ஒரு தன்னிறைவு காணப்படுகின்றது என்றால் அதற்கு காரணம் பிரித்தானியரின் இலங்கை விஐயமே. இவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழில்துறை பல வெற்றிபாதைகளை நோக்கி சென்றுள்ளது. இதனால் பெருந்தோட்டம் உட்பட சிறுதோட்டங்களில் சுமார் மூன்று லட்சம் பேர் தொழிலாளர்களாக இருக்கின்றனர். மலையகத்தில் மாத்திரம் 1.5 மில்லியன் தோட்ட துறையை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.