ஹிஜ்ரி வருடம் 1436 ரமழான் பிறை 11
மன்மத வருடம் ஆனி மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை

MONDAY, JUNE 29 ,2015
வரு. 83 இல.151
 
ஸகாத் பெறுநரை எவ்வாறு ஸகாத் வழங்குநராக மாற்றுவது?

ஸகாத் பெறுநரை எவ்வாறு ஸகாத் வழங்குநராக மாற்றுவது?

சீனைத்து உலகையும் படைத்து அதன் இயல்புகளையும் இயல்பூக்கங்களையும் மிக நுண்ணியமாக அறிந்துள்ள அல்லாஹ் மிக ஆழமான நோக்கங்களுடன் ஸகா த்தை முஸ்லிம்கள் மீது கடமையாக்கி யுள்ளான்.

ஸகாத்தின் நோக்கம் அதன் முக்கியத் துவம் அதனை கூட்டாக வசூலித்து விநியோகிப்பதன் அவசியம் என்பவற்றை விவரிப்பது இவ்வாய்வின் நோக்கமல்ல. ஏனெனில் அவையனைத்தும் ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட யதார்த்தங்களாகும்.

இவ்வாய்வின் பிரதான நோக்கம் ஸகாத் பெறக்கூடியவர்கள் காலப்போக்கில் அந்நிலையிலிருந்து மாறி ஸகாத் வழங்கக்கூடிவர்களாக எவ்வாறு மாற்றப் படலாம் என்பதனை விளக்குவதாகும்.

கூட்டாக ஸகாத்தை சேகரித்து விநியோகிப்பதன் பிரதான நோக்கங்களுள் ஒன்று சமூகத்தில் காணப்படும் ஏழ்மை, வறுமை பிரச்சினைக்கு நிலையானதும் நிரந்தரமுமான தீர்வைக் காண்பது ஆகும்.

நாட்டின் பல பாகங்களிலும் மிக சிறப்பாக இயங்கும் கூட்டு ஸகாத் நிறுவனங்கள் மேற்படி நோக்கத்தை நிறைவு செய்துள்ளனரா? அல்லது தன்மூலம் ஸகாத் பெற்ற பயனாளிகளுள் எத்தனை பேர் ஸகாத் வழங்கக் கூடிய வர்களாக மாறியுள்ளனர் என பின்னோக்கிப் பார்த்தால் விடை மெச்சத்தக்கதாக இருக்காது.

தொழில்சார் நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட ஸகாத் பங்களிப்பு பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட விளைவை அளிப்பதில்லை என கூட்டு ஸகாத் நிறுவனத்தினர் பலர் அங்கலாய்த்துக் கொள்வதை காண்கிறோம்.

ஸகாத் என்பது வளர்ச்சி, செழிப்பு என்ற கருத்தை தருகின்றது. அதன் யதார்த்தம் என்னவெனில், ஸகாத் வழங்குவதன் மூலம் தனது பொருளாதாரம் மேலும் மேலும் வளர்ச்சியடைகின்றது. அதுபோலவே ஸகாத் பெற்றவர்களும் அதனை உரியமுறையில் பயன்படுத்தும் போது அவர்களும் வளர்ச்சியடைகின்றனர்.

இதுதான் ஸகாத்தின் யதார்த்தம். எனினும் நடைமுறையில் ஸகாத் பெற்றவர்கள் தொடர்ந்தும் ஸகாத் பெறக் கூடியவர் களாகவே காணப்படுகின்றனர். இது ஸகாத்தின் யதார்த்தத்தில் உள்ள பிழையா? அல்லது ஸகாத் நடை முறைப்படுத் தலில் உள்ள பிழையா? நிச்சயமாக முதலாவதாக இருக்க முடியாது. அவ்வா றெனில் எமது விநியோக முறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றம் என்ன? ஸகாத்தை கூட்டாக வசூலி ப்பது மாத்திரமல்ல, அதன் விநியோகமும் இயன்றவரை கூட்டாகவே இடம்பெறல் வேண்டும். தனிநபர்கள் ஸகாத் விநியோகிப்பது போன்று அது ஸகாத் பெறு நர்கள் மத்தியில் தூவி விடப் படக்கூடாது. (15ம் பக்கம் பார்க்க)

அஷ்ஷெய்க்

எம். மிப்லி (நZமி)

ஆணையாளர், உள்நாட்டு

இறைவரித் திணைக்களம்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி