ஹிஜ்ரி வருடம் 1436 ரமழான் பிறை 11
மன்மத வருடம் ஆனி மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை

MONDAY, JUNE 29 ,2015
வரு. 83 இல.151

தேசிய அரசாங்கத்தில் சகல கட்சிகளுக்கும்
அதிகாரங்கள் பகிர்வு

இனவாதத்தை தூண்டுகிறது மஹிந்த தரப்பு; வெள்ளைவான் கலாசாரத்தை உருவாக்கவும் முயற்சி

“தேர்தலில் வெற்றி பெறும் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்க மொன்றை உருவாக்குவதோடு, பொறுப்புக்களையும் சகல கட்சிகளுக்கும் பகிர்ந்தளித்து நாட்டை அபிவிரு த்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்வோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். அதேநேரம் விருப்பு வாக்கு முறையில் அமையும் இறுதித் தேர்தலாக இந்தத் தேர்தல் அமையும். இதில் மஹிந்த தரப்பு இனவாதத்தைத் தூண்டி மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர். அப்படியானவர்கள் மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை கொண்டு வருவார்களெனவும் பிரதமர் தெரிவித்தார்.

விவரம்

இலங்கை பொதுத் தேர்தலில் பி.ஜே.பி.

[2015-06-29 13:45]

எதிர்வரும் தேர்தலில் பொது ஜன பெரமுண எனும் பெயரில் தமது கட்சி களமிறங்கவுள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

விவரம்


பாகிஸ்தானை வென்றது இலங்கை

[2015-06-29 12:27]

கொழும்பு பாக்கியசோதி சரவணமுத்து மைதானத்தில் (பி.சரா) நடைபெற்ற பாகிஸ்தானுடனான இரண்டாவது . . .

விவரம்


முடிந்தால் என்னை வெல்லட்டும்; ரணில் மஹிந்தவுக்கு சவால்

[2015-06-29 12:10]

பிரதமர் வேட்பாளராக களமிறங்குவாராயின் என்னை வென்று காட்டட்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்க சவால் விட்டுள்ளார்.

விவரம்


ராஜபக்‌ஷ வேண்டாம்! - ஹெல உருமய

[2015-06-29 11:47]

எக்காரணத்துக்காகவும் ராஜபக்ஷவுடன் இணைவதில் உடன்பாடில்லை என ஜாதிக ஹெல உருமய தெரிவித்துள்ளது.

விவரம்


தனிமையில் பீல்ட் மார்ஷல்!

[2015-06-29 11:17]

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது ஜனநாயகக் கட்சி தனியாக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விவரம்


மஹிந்த எந்த அணியில்? இன்று தீர்க்கமான சந்திப்பு

[2015-06-29 10:40]


153 ஓட்ட இலக்கை நோக்கி இலங்கை அணி; இன்று இறுதி நாள்

[2015-06-29 10:25]


தேர்தல் திணைக்கள அறிவுரைகளை மீறும் அரச ஊழியர்களுக்கு 03 வருட சிறை

தேர்தல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத அரசாங்க ஊழியர்களை ஆகக்கூடியது 03 வருடங்களுக்கு சிறையில் அடைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வழங்கப் பட்டுள்ளது.அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற் கமையவே தேர்தல்கள் ஆணையாளருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.

விவரம்

தேர்தல் கூட்டு யாருடன்? மத்திய குழுவில் தீர்மானம்

பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டி யிடுவது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவுடன் கலந்து ரையாடி பின் தெரி விக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் அரசி யல் துறை தலைவர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் புதிய அலுவலகத்தை நேற்று (28) உத்தி யோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவரம்

ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்த வீடு: பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதே இலக்கு

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஒரு சொந்த வீடு என்ற வகையில் நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்காகுமென நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்தார்.

விவரம்
 

திருகோணமலை கடற்படை முகாமுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலாவெளி கடற்கரைக்கும் சென்றிருந்தார். அங்கு வருகை தந்திருந்த சிறுவர், சிறுமிகளுடனும் மகிழ்ச்சியுடன் உரையாடியவாறு நடந்து
 செல்கிறார். படம்: சுதத் சில்வா