ஹிஜ்ரி வருடம் 1436 ரமழான் பிறை 11
மன்மத வருடம் ஆனி மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை

MONDAY, JUNE 29 ,2015
வரு. 83 இல.151
 

துண்டித்த தலையுடன் ~செல்பி' எடுத்த பிரான்ஸ் தாக்குதல்தாரி

துண்டித்த தலையுடன் ~செல்பி' எடுத்த பிரான்ஸ் தாக்குதல்தாரி

பிரான்ஸில் எரிவாயு தொழிற்சாலையில் தாக் குதல் நடத்திய சந்தேக நபர் தனது முதலாளி யின் துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி படம் எடுத்துள்ளார்.

லியோன் நகருக்கு அருகில் கடந்த வெள்ளிக் கிழமை தாக்குதல் நடத்திய 35 வயது யாசின் சலாஹியினால் எடுக்கப்பட்ட செல்பி படத்தை கனேடிய கையடக்க தொலைபேசி இலக்கம் ஒன்றுக்கு வட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

கொல்லப்பட்ட முதலாளியான ஹார்வ் கோனரா ஸின் தலை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) கொடியு டன் வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபர் எரியக்கூடிய திரவத்தைக் கொண்டு தொழிற்சாலையில் வெடிப்பை ஏற்படுத் தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதலுக் கான பின்னணி இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. வெளிநாட்டு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி