ஹிஜ்ரி வருடம் 1436 ரமழான் பிறை 11
மன்மத வருடம் ஆனி மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை

MONDAY, JUNE 29 ,2015
வரு. 83 இல.151
 

ஆர்.கே இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு

ஆர்.கே இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு

மேலிடம் நடவடிக்கை எடுக்குமோ என அ.தி.மு.க கலக்கம்

இடைத்தேர்தல் நடந்த ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதியில் நேற்று முன்தினம் 74.40 சதவீத வாக்குகள் பதிவாகின. ஏற்காடு, ஸ்ரீPரங்கம் இடைத்தேர்தலை விட வாக்குப்பதிவு சத வீதம் குறைந்து உள்ளதால் மேலி டம் நடவடிக்கை எடுக்குமோ என அ.தி.மு.க. நிர்வாகிகள் கலக்க த்தில் உள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில், முதல்வர் nஜய லலிதா களம் இறங்கினார். அதனால் முன்னைய இடைத்தேர்தல்கள் பாணி யில் 50 பேர் தேர்தல் பொறுப் பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் என மாநிலம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க.வினரும் தொகுதி யில் முகாமிட்டனர். தி.மு.க. - தே.மு.தி.க. - பா.ஜ. - காங். உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர் தலை புறக்கணித்தன. இந்திய கம்ய+ னிஸ்ட் சார்பில் மகேந்திரனும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உட்பட சுயேச்சைகள் 26 பேரும் போட்டி யிட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் 2011 சட்டசபை தேர்தலில் 72.40 சதவீத வாக்குகள் பதிவாகின. 2014 லோக்சபா தேர்தலில் 65 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. தற்போதைய இடைத்தேர்தலில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள் ளன. முக்கிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களை மிஞ்சும் வகையில் 90 சதவீத வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டிருந்தது. இதை நிறைவேற்ற வாக்காளர்களை அழை த்து வருவதற்காக வாக்குச்சாவடிக்கு 25 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அப்படி இருந்தும் ஏற்காடு, ஸ்ரீPரங்கம் இடைத்தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. இதனால் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக் குமோ என தேர்தல் பொறுப்பாளர் களாக பணியாற்றிய அ.தி.மு.க.வினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.

நாளை 30ம் திகதி வாக்கு எண் ணிக்கை நடைபெறுகிறது.

தொடர் மின்தடை: வாக்குப்பதிவு பாதிப்பு

திருவொற்றியு+ர் பகுதிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில், கனகர் வீதி, ராதாகிருஷ்ணன் நகர் பகுதி களில் நான்கு முறைக்கு மேல் மின் தடை ஏற்பட்டது. இதனால் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதி காரி சந்தீப் சக்சேனா கூறுகையில், ஆண் வாக்காளர்கள் சதவீதம் 74; பெண் வாக்காளர்கள் சதவீதம் 74.8. இன்று காலை 11:00 மணிக்கு தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு ஆவ ணங்கள் சரி பார்க்கப்படும். அதன் பின் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் தெரியவரும் என்றார்.

டிராபிக் ராமசாமி வாக்குவாதம்:

தண்டையார்பேட்டை வாக்குச் சாவடியில் வெளியு+ர்வாசிகள் வாக்கு போடுவதாகக் கூறி சுயேச்சை வேட் பாளர் டிராபிக் ராமசாமி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பொலிஸார் அவரை சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில், இந்த தேர்தல் ஜன நாயக முறையில் நடக்கவில்லை; அத்துமீறல் அதிகமாக இருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி