ஹிஜ்ரி வருடம் 1436 ரமழான் பிறை 11
மன்மத வருடம் ஆனி மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை

MONDAY, JUNE 29 ,2015
வரு. 83 இல.151
 

இலங்கைக்கு 153 ஓட்ட இலக்கு

இலங்கைக்கு 153 ஓட்ட இலக்கு

பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று மூன்று போட்டி களைக் கொண்ட டெஸ்ட் தொடரை சம நிலைக்கு கொண்டுவர இலங்கை அணிக்கு 153 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, ஆர். சரா மைதானத்தில் நடை பெற்றுவரும் போட்டியின் நான்காவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 118.2 ஓவர் களில் 329 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டு களையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு பின்னர் போட்டி முன்கூட் டியே நிறுத்தப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான போட்டி யின் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கைக் காக அபாரமாக பந்து வீசிய தரிந்து கவு'hல் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை அரம்பித்த இலங்கை அணி 121.3 ஓவர்க ளில் சகல விக்கெட் டுகளையும் இழந்து 315 ஓட்டங்களை பெற்றது. இதனால் 177 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் பின்னிலை பெற்ற நிலையிலேயே பாகிஸ் தான் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம் பித்தது.

இதில் 171 ஓட்டங் களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலு வான நிலையில் பாகிஸ்தான் அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந் தது.

64 ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த அஸார் அலி 9 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தார். 308 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவர் 117 ஓட்டங்களை பெற்றார். அஸார் அலியுடன் சேர்ந்து முதல் விக்கெட் டுக்காக 120 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்ட அஹமது 'ஸாத் 69 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

எனினும் இலங்கைக்காக அபாரமாக பந்து வீசிய தம்மிக்க பிரசாத் மற்றும் கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய துஷ்மன்த 'மீரா பாக். விக்கெட்டுகளை முக்கியமான தருணங்களில் பதம்பார்த்தனர். இதன்மூலம் பிரசாத் 4 விக்கெட்டுகளையும் 'மீர 3 விக் கெட்டுகளையும் வீழ்த்தினர். தவிர, அணித் தலைவர் அன்ஜலோ மத்திய+ஸ் 2 விக்கெட்; டுகளை வீழ்த்தினார்.

இன்று அட்டத்தின் கடைசி நாளாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி