ஹிஜ்ரி வருடம் 1436 ஷஃபான் பிறை 14
மன்மத வருடம் வைகாசி மாதம் 19ம் நாள் செவ்வாய்க்கிழமை

TUESDAY, JUNE 02 ,2015
வரு. 83 இல.129
 
ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதை கனவாகக் கொண்டு வாழ்ந்த தாவீது அடிகளார்

ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதை கனவாகக் கொண்டு வாழ்ந்த தாவீது அடிகளார்

அன்னாரின் 34வது நினைவு தினம் நேற்று

லீம் நாட்டில் காலத்துக்கு காலம் பல அறிஞர்கள் தோன்றி மறைந்து ள்ளனர். அவர்கள் வரிசையில் 1907ம் ஆண்டு யூன் மாதம் 28ம் திகதி பிறந்து 1981ம் ஆண்டு யூன் மாதம் 1ம் திகதி மறைந்த தும்பளை அருட்தந்தை கலாநிதி தாவீது அடிகளாரும் ஒருவர் ஆவார்.

அவர் ஒரு மேன்மை மிக்க இலட்சியவாதி ஆவார். அவர் வாழ்ந்த கால இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை நன்றாய் அறிந்த ஒரு வரலாற்று அறிஞர் ஆகமட்டுமல்ல, பன்மொழிகளின் ஆய்வாளனாகவும் விளங்கினார். அவர் காலத்தில் இனப்பூசல்கள் இடையிடையே ஏற்பட்டு பல சொல்லொணாத் தாக்கங்களை உருவாக்கி மக்களின் வாழ்க்கையைச் சின்னாபின்னப்படுத்தின.

மொழிரீதியாகவும், இனரீதியாகவும், சிங்களவர், தமிழர் என்று இரு துருவங்களாக பாகுபாட்டு டன் கருத்துக்கள் வெளியி டப்பட்டு வந்தமையினால் அத்தகைய அபிப்பிராயங் களை சீர்செய்து இன, மொழி பேதங்களை களைவதையே நோக்காகக் கொண்டவர் தாவீது அடிகள்.

இந்த இலட்சியத்தைக் கொண்ட தாவீது அடிகள் மக்கள் மத்தியிலே ‘இனங் கள்’ என்ற அடிப்படையில் சிந்திப்பதைச் சீர் செய்து இனங்களிடையே ஒற்றுமை யையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த தனது மொழி ஆய்வுகளை மேற்கொண்டார்.

முக்கியமாக சொற்பிறப்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிடையே ஒற்றுமையைப் பண்புகளையும் அம்மொழிகளின் தோற்றங்களையும் வெளிக்கொணர்ந்து உண்மை நிலைமைகளை எடுத்துக் கூறி இனப் பூசல்கள், பிணக்குகள் அற்ற ஐக்கிய இலங்கையை உருவாக்குவதையே இலட்சியமாக கொண்டு பணி ஆற்றினார். அவர் வாழ்ந்த காலத்தின் இறுதிக் கட்டத்தில் ‘சிங்களவர் எங்கள் உறவினர்’ என்ற கருத்தினை வலியுறுத்தி சொற்பிறப்பியல் ஒப்பீட்டு பேரகராதியை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டார்.

தமிழ் - சிங்கள சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை 1973ம் ஆண்டு தமிழிலும், தமிழ், சிங்கள சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை 1974ம் ஆண்டு ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார்.

சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் - சிங்கள இலக்கண அகராதி (மூன்றாம் பாகம்) என்ற ஆய்வு வெளியீட்டின் ஆறாம் பக்கத்தில் பின்வருமாறு குறிப் பிடுகின்றார். “இந்த மொழி ஆய்வு நம் நாட்டில் பெரும் பயனைத் தரப் போகின்றது. பயன் மொழிக்கு மட்டுமன்று சிங்கள தமிழ் இனத்திற்கே நல்லபயன் அளிக்க இருக்கிறது.

எனது ஆய்வு சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்குள்ளும் உள்ள நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டி இரு இன உறவுக்கு வித்திட்டு தேசிய ஒற்றுமையை கொண்டுவர வல்லது...” இதன் மூலம் மொழிகளிடையே அல்லது வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்க ளிடையே குரோதம், பகைமையுணர்வு வளர்வதை அவர் விரும்பவில்லை எனத் தெரிகிறது.

மொழி ஓர் தொடர்பாடல் கருவி அது மனித உறவை வளர்க்கப்பயன்படுத்தப்பட வேண்டுமே அன்றி மனிதரை பிரிக்கும் கருவியாக மாறக் கூடாது. மனிதனை மனிதன் மதித்து வாழுவதற்கே மொழியைப் பயன்படுத்த வேண்டும். இதுவே தாவீது அடிகளின் முக்கிய இலட்சியமாகும்.

தேசத்தின் ஒற்றுமையை முன்னிலைப்படுத்தி மொழி ஆய்வுகளை மேற்கொண்ட தாவீது அடிகள் பற்றி 1982ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட ‘சற்றர்டே றிவீயூ’ (ஷிaturனீay ஞிலீviலீw) என்ற ஆங்கிலப் பத்திரிகையில் அவரைப் பற்றி ஓர் கட்டுரையை அருட்பணி எம்.பாவிலுப்பிள்ளை (அமதி) எழுதிப் பிரசுரித்தார். அக்கட்டுரையின் தலைப்பு ‘ஹிhலீ ழிatலீ பிr.ளிaviனீ... சீartyr to national unity’ என்பதாகும். அதாவது “மறைந்த தாவீது அடிகள் - தேசத்தின் ஐக்கியத்திற்குத் தியாகி” என்பதாகும்.

இது அவர் ஓர் தேசியவாதி என்பதை ஊர்ஜிதப்படுத்தி யுள்ளது. அவர் தன்னை ஓர் இனவாதியாகக் காட்டி கருத்துக்களை வெளியிட விரும்பவில்லை. இன வாதத்தை எடுத்துக் கூறும் அரசியல்வாதிகளுக்கு அறிவுரையாகச் சில கருத்துக்களை வெளியிட்டார். பேரினவாதிகளின் ஆட்சி அதன் போக்கை மாற்றி சிறந்த நல்லாட்சி ஏற்பட்டு ஐக்கிய இலங்கை உருவாகுவதையே அவர் விரும்பினார்.

இலங்கையில் வாழும் எல்லா மக்களிடையேயும் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த மாமேதை தாவீது அடிகள் முன்னைய யாழ். பொது நூலகம் என்ற அறிவாலயம் 1981 மே இறுதி நாளில் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேட்டு துயில் கொள்ளச் சென்றவர் மீளாத்துயில் கொண்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி