ஹிஜ்ரி வருடம் 1436 ஷஃபான் பிறை 14
மன்மத வருடம் வைகாசி மாதம் 19ம் நாள் செவ்வாய்க்கிழமை

TUESDAY, JUNE 02 ,2015
வரு. 83 இல.129
 

பரிந்துரை செபத்தின் வல்லமை

பரிந்துரை செபத்தின் வல்லமை

நாம் நமக்காக செபிப்பதோடு பிறருக்காகவும் செபிப்பது பரிந்துரை செபமாகிறது

செபமே ஜெயம் என்பதை பரிசுத்த வேதாகமத்தில் ஆபிராகாம். மோசே, தாவீது போன்றவர்களின் வாழ்க்கையிலிருந்து எமக்குப் பார்க்க முடிகிறது.

பிறர் ஆபத்தில் விழும்போது அவர்களை அதிலிருந்து பாதுகாக்க எம்மால் செய்யப்படும் பரிந்துரை செபம் பயனளிக்கிறது. எத்தகைய சூழலிலும் இறைவன் அதை ஏற்று பலனளிப்பதை பரிசுத்த வேதாகமம் எமக்கு சாட்சி பகர்கிறது.

இறைவனின் விருப்பப்படி வாழாமல் தமது போக்கில் வாழ்ந்த சோதோம் மக்களை அழித்துவிடப் போவதாக இறைவன் ஆபிரகாமுக்குத் தெரிவிக்கின்றார்.

எனினும் ஆபிரகாம் அதனை விரும்பவில்லை. அந்த மக்கள் அழிக்கப்படக்கூடாது என விரும்புகிறார். அவர் உடனே இறைவனிடம் அந்த மக்களுக்காகப் பரிந்து பேசுகின்றார். அந்த பரிந்துரை செபம் பயனளிக்கின்றது.

ஆபிரகாம் இறைவனிடம் வாதாடுகிறார். ஆண்டவரே அங்கு ஐம்பது நல்லவர்கள் இருந்தால் நீங்கள் சோதோமை அழிப்பீர்களா? என்று கேட்கிறார். கடவுளோ 50 பேர் இருந்தால் அழிப்பதில்¨ என்கிறார். அதன் பின் 40 பேர் நல்லவர்கள் இருந்தால் அழிப்பீர்களா என்றும் படிப்படியாக எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு வந்த பத்து நல்லவர்கள் இருந்தால் சோதோமை அழிப்பீர்களா? என்று ஆபிரகாம் இறைவனிடம் இறுதியாகக் கேட்கின்றார். பத்து நல்லவர்கள் இருந்தாலும் நான் அழிக்க மாட்டேன் என இறைவன் கூறுகிறார்.

இறுதியில் ஆபிராகம் தம்மைத் தாழ்த்து இறைவா உமது விருப்பத்துக்கு நான் பணிக்கிறேன் என்கிறார். இறைவனும் சோதோமை அழிக்கவில்லை.

இவ்வாறு பிறருக்காக நாம் பரிந்து பேசுவது பரிந்துரைச் சேபமாகிறது. யார் யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ யார் யருக்கெல்லாம் இறைவனின் கருணை தேவைப்படுகிறதோ அவர்களுக்காக நாம் செபிப்பது முக்கியம்.

பிறர் தண்டனைக்கு ஆளாகும் போது அவர்களுக்காக நாம் செபித்தால் இறைவன் அவர்களை மன்னிக்கின்றார்.

செபமே எமது வாழ்வின் வெற்றிக்கு அடிப்படையாகிறது.

அதேபோன் று மோசே எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட காணான் தேசத்துக்கு மக்களை அழைத்துக் கொண்டு போகிறார். இடை நடுவில் வரண்ட பாலை நிலத்தில் அவர்கள் தங்க நேரிட்டது.

அங்கு தண்ணீரில்லை என்பதால் மக்கள் மோசேயை நச்சரிக்கின்றார்கள். அவரும் இறைவனிடம் அந்த மக்களுக்காகச் செபிக்கின்றார். உடனே ஒரு குன்றிலிருந்து ஊற்றெடுத்து தண்ணீர் வருகிறது.

பல்வேறு சூழலிலும் பல்வேறு ஆபத்துக்களிலும் நாம் எர்பாராத நேரத்திலும் இறைவன் எமது செபத்தைக் கேட்டு கருணை கூர்கிறார். அவர் எங்களைக் கைவிட மாட்டார்.

நாம் அவரை நம்ப வேண்டும். நம்பிக்கையுடன் கேட்பதே நமக்கு கிடைக்கின்றது.

தாவீது என்ற ஆடு மேய்க்கும் சிறுவனை இறைவன் பயன்படுத்துகின்றார். அரசராக்குறார். மக்களின் விடுதலைக்காக இவ்வாறு பலர் மூலம் இறைவன் செய்த அற்புதத்தை பரிசுத்த வேதாகமம் எமக்குத் தெரிவிக்கின்றது.

இறைவனுக்கு முதலிடம் கொடுத்து வாழ்ந்தவர்களோடு இறைவன் பேசியிருக்கின்றார். அவர்கள் தர்க்கம் புரிய இடமளித்துள்ளார். அவர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றியுள்ளார்.

நாமும் எமது வாழ்வில் இறைவனுக்கு முதலிடம் கொடுத்து அவர் விருப்பப்படி வாழ்ந்தால் நமது வாழ்விலும் நாம் பரிந்து செபிப்போர் வாழ்விலும் அற்புதம் நடப்பது உறுதி.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி