ஹிஜ்ரி வருடம் 1436 ஷஃபான் பிறை 14
மன்மத வருடம் வைகாசி மாதம் 19ம் நாள் செவ்வாய்க்கிழமை

TUESDAY, JUNE 02 ,2015
வரு. 83 இல.129
 

சோபிக்க தவறிய நட்சத்திர வீரர்களான சங்கக்கார, பீட்டர்சன்

சோபிக்க தவறிய நட்சத்திர வீரர்களான சங்கக்கார, பீட்டர்சன்

இங்கிலாந்து கவுண்டிப் போட்டியில் லங்கா'யர் அணிக்கெதிரான போட்டி யில் நட்சத்திர வீரர்களான சங்கக் கார மற்றும் பீட்டர்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்மை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.

இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான போட்டியில், லங்கா'யர் மற்றும் சரே அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லங்கா'யர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதைத் தொடர்ந்து சரே அணி முதலில் துடுப்பெடுத்தாட அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ரொரி பர்ன்ஸ் 12 ஓட்டங்களுடனும், அன்சாரி 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர்களான சங்கக்கார மற்றும் பீட் டர்சன் சொற்ப ஓட்டங்களுடன் ஆடு களத்தை விட்டு வெளியேரினர்.

சங்கக்கார 10 ஓட்டங்களுடனும், பீட்டர்சன் 2 ஓட்டங்களுடனும் பெவி லியம் திரும்பினர்.

இதையடுத்து களமிறங்கிய டெவிஸ் 41 ஓட்டங்களுடனும், றோய் 21 ஓட் டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந் நிலையில், சரே அணி 46 ஓவர் நிறைவில், 4 விக்கெட் இழப் புக்கு 145 ஓட்டங்களுடன் துடுப்பெடுத் தாடி வருகின்றது.

லங்கா'யர் அணியின் பந்து வீச்சு சார்பில், nஜர்விஸ் 2 விக்கெட்டு களையும், டாம் பெய்லி, ஜோர்டன் கிளார்க், தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி