ஹிஜ்ரி வருடம் 1436 ஷஃபான் பிறை 14
மன்மத வருடம் வைகாசி மாதம் 19ம் நாள் செவ்வாய்க்கிழமை

TUESDAY, JUNE 02 ,2015
வரு. 83 இல.129
 

ஈராக் இராணுவ தளத்தின் மீது தாக்குதல்: படையினர் பலர் பலி

ஈராக் இராணுவ தளத்தின் மீது தாக்குதல்: படையினர் பலர் பலி

வடக்கு பலூஜh நகரில் இருக்கும் இராணுவ தளம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 42 ஈராக் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெடிபொருட்களை நிரப்பிய கவசவாகனம் ஒன்றை செலுத்திவந்த தற்கொலைதாரி இராணு வத் தளத்தின் ஆயுதக்கிடங்கிற்கு அருகில் வைத்து அதனை வெடிக்கச்செய்திருப்பதாக இராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனையடுத்து ஆயுதக்கிடங்கு இருக்கும் பகுதி பல மணி நேரங் கள் எரிந்தவண்ணம் இருந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலின் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக உள்@ர் அதி காரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு கடந்த ஆண்டு வடக்கு நகரான மொசூலை கைப்பற்றியதை அடுத்து சுமார் 2300 ஹ{ம்வீ கவச வாகனங்கள் காணாமல்போயிருப்பதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி குறிப்பிட்டு ஒருநாள் கழித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கவசவாகனங்களை இழந்திருப்பது ஈராக் இராணுவத்திற்கு பாரிய பின்னடைவாக பார்க் கப்படுகிறது.

இதனிடையே நேற்று இடம்பெற்ற பிறிதொரு சம்பவத்தில், பலூஜh நகரின் பரபரப்பான சந்தை பகுதியில் உள்ள பள்ளிவாசலை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 18 பேர் காய மடைந்தனர்.

தவிர, ஐ.எஸ். ஆயுததாரிகள் அன்பார் மாகாணத்தின் சித்தீக் நகரில் பதுங்கி இருந்து நடத்திய தாக்குதலில் ஈராக் படையினர் மற்றும் அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து போராடும் போரா ளிகள் என குறைந்தது 33 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

அன்பார் மாகாண தலைநகரான ரமடியை ஐ.எஸ். குழு கைப்பற்றியதை அடுத்து அதனை மீட்கும் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை ஈராக் அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி