ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 

குஜராத் கலவர வழக்குகளை நடத்திய சமூக சேவகி டீஸ்டா வீட்டை சுற்றி வளைத்தது குஜராத் பொலிஸ்

குஜராத் கலவர வழக்குகளை நடத்திய சமூக சேவகி டீஸ்டா வீட்டை சுற்றி வளைத்தது குஜராத் பொலிஸ்

குஜராத் கலவர வழக்குகளை முன்னின்று நடத் திய சமூக சேவகி டீஸ்டா செடல்வத் மீது தொட ரப்பட்டிருந்த நிதி முறைகேடு வழக்கில் அவருக்கு ஆமதாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தது. அதை அடுத்து அவரை கைது செய்ய குஜராத் பொலிஸார் அவர் வீட்டிற்குள் நுழைந்த போது உச்ச நீதிமன்றம்; முன் பிணை வழங்கி கைதில் இருந்து காப்பாற்றியது.

'குஜராத் கலவரத்தின் போது 69 பேர் எரித்துக் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டியில் அருங்காட் சியம் அமைக்க வேண்டும் என தெரிவித்து ஆமதாபாத்தை சேர்ந்த டீஸ்டா செடல்வத் என்ற சமூக சேவகியும் அவர் கணவர் ஜhவத் ஆனந்தும் ஒன்றரை கோடி ரூபாயை திரட்டினர். 2002 முதல் 2009 வரை அவர்கள் நிதி திரட்டியும் இதுவரை அருங்காட்சியகம் அமைக்கவில்லை.

அந்த பண த்தை அவர்கள் முறைகேடாக சுருட்டி விட்டனர் என தெரிவித்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டீஸ்டா மீதும் அவர் கணவர் மீதும் ஆமதாபாத் குற்றப் பிரிவு பொலிஸில் பலர் வழக்கு தொடர்ந் தனர். இந்த வழக்கு ஆமதாபாத் உயர் நீதிமன்றத ;தில் நடைபெற்று வந்தது. டீஸ்டாவை கைது செய்ய பொலிஸார் முன்வந்த போது முன் பிணை கோரி ஆமதாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அவரின் செயல்பாட்டில் பல ஆண்டுக ளாக அதிருப்தி அடைந்திருந்த நீதிமன்றம் அவரு க்கு முன் பிணை வழங்க மறுத்தது. 16ம் திகதி குற்றப் பிரிவு பொலிஸில் ஆஜராகுமாறு டீஸ்டா வுக்கு உத்தரவிட்டது. இதனால் அவரை கைது செய்ய குஜராத் பொலிஸார் அவர் வீடு முன் குவிந்தனர். இதனால் அலறிய டீஸ்டா, உச்சி நீதிமன்றத்தை நாடினார். காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் உச்ச நீதிமன்ற பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல், டீஸ்டா வுக்கு ஆதரவாக, உச்சி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் அவசர வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்விடம் கபில் சிபல், 'உச்ச நீதிமன்றம்; இந்த வழக்கை விசாரித்து, டீஸ்டாவுக்கு முன் பிணை வழங்காவிட்டால், அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்படுவார்" என்றார். இதையடுத்து 'டீஸ்டாவின் முன் பிணை மனு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. அதுவரை அவரை, கைது செய்ய குஜராத் பொலிஸாருக்கு தடை விதிக்கி றோம்" என்றனர்.

இதனால் கைது செய்யப்படும் அபாயத்திலிருந்து டீஸ்டா நேற்று முன்தினம் தப்பினார். நேற்று அவ ரின் முன் பிணை மனு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதில் அவருக்கு பிணை வழங்கப்படுமா என்பது தெரிய வரும். டீஸ்டாவுடன் சேர்த்து குற் றம்சாட்டப்பட்டிருந்த மூன்று பேருக்கும் ஆமதாபாத் உயர் நீதிமன்றம் முன் பிணை வழங்கியது. பிணை பெற்றவர்களில் ஒருவர் எரித்துக் கொல்லப் பட்ட ஜhப்ரியின் மகன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி