ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 

முதல் போட்டிகளில் இலங்கை - நிய+சிலாந்து, அவுஸ்திரேலிய - இங்கிலாந்து பலப்பரீட்சை

11ஆவது உலகக்கிண்ணம் :

முதல் போட்டிகளில் இலங்கை - நிய+சிலாந்து, அவுஸ்திரேலிய - இங்கிலாந்து பலப்பரீட்சை

அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் 11 ஆவது உலகக்கிண்ண போட்டிகளில் இலங்கை - நிய+சிலாந்து அணிகள் மோதும் முதல்போட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இதேவளை மற்று மொரு போட்டி இன்று காலை 9 மணிக்கு இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் மோது கின்றன. இப்போட்டி மெல்பேர்ன் மைதானத் தில் இடம்பெறுகிறது.இரண்டு அணிகளும் பலம் பொருந்திய நிலையில் களமிறங்குகின் றமை விசேட அம்சமாகும். இரண்டு அணிக ளிலும் வேகப்பந்து வீச்சு பலம் பொருந்திய நிலையில் காணப்பட்டாலும் அவுஸ்திரேலிய அணியின் செந்த மண் என்பதால் அவ்வணி வெற்றி பெற முழுமூச்சுடன் களமிறங்கும்.

இதேவேளைசொந்த மண்ணில் விளையா டுவது நியு+சிலாந்து அணிக்கு கூடுதல் பலமா கும். மேலும் அந்த அணி சமீபத்தில் சொந்த மண்ணில் இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறது. வெற்றியுடன் அந்த அணி கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அந்த அணியில் தலைவர்; மெக்கல்லம், ரோஸ் டெய்லர், வில்லியம்சன், அண்டர்சன், ரோஞ்சி போன்ற சிறந்த துடப்பாட்டவீரர்களும் மிலின், போல்ட், மில்ஸ், வெட்டோரி, போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

நியு+சிலாந்துக்கு எல்லா வகையிலும் இலங்கை அணிக்கு சவால் கொடுத்து விளை யாடும். தலைவர்; மெத்யு+ஸ், முன்னாள் தலை வர்கள் சங்கக்கார, ஜயவர்தன, திரிமான்ன, பெரேரா, மலிங்க போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

அவுஸ்திரேலிய தலைவர்; கிளார்க் இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார். இதனால் பெய்லி தலைவராக பணியாற்ற உள்ளார். ஆரோன் பிஞ்ச், சுமித், மேக்ஸ்வெல், வோர் னர் போன்ற அதிரடி தடுப்பாட்டவீரர்களும் ஜோன்சன், ஸ்டார்க் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர்.

அவுஸ்திரேலிய அணி சமீபத்தில் இங்கி லாந்தை 3 முறை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் உள்ளது. உலக கோப்பை என்பதால் இங்கிலாந்தும் கடு மையாக போராடும்.

உலகக்கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள அணி களில் தாமும் சிறப்பான அணியாக செயற் படவுள்ளதாக தெரிவித்துள்ள மெக்கல்லம், உலகக்கிண்ணத்திற்காக சில மாற்றங்களை தமது அணியில் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்போட்டி தொடர்பாக செய் தியாளர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகக்கிண்ண போட்டிகளை எதிர்பார்த்து தாம் காத்திருப்பதாகவும், போட் டிகளில் எதிரணியினரிற்கு மிகுந்த சவாலாக தாம் அமைவோம் எனவும் நம்பிக்கை வெளி யிட்டுள்ளார்.

அதேவேளை, போட்டியில் வெற்றி தோல் விகள் ஏற்பட்டாலும் சமநிலையை ஏற்படுத்த தாம் முயற்சி செய்யவுள்ளதாகவும், போட்டி கள் கடுமையாக அமையும் பட்சத்தில் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுவோம் என வும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்து டன், உலகக்கிண்ணத்தை பெறுவதற்கான சிறந்த சந்தர்ப்பம் தமக்கு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலகக்கிண்ண தொடரில் கிறிஸ்சர்ச்சில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியு+ஸி லாந்து மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியைப் பெறுத்த வரை இரண்டு பயிற்சிப் போட்டியில் சிம்பாப்வே அணியுடனும் தென்னாபிரிக்க அணியுடனும் தோல்வியை தழுவியிருந்தமை விசேட அம்ச மாகும்.

இலங்கை அணியின் துல்லியமான, நம் பிக்கைக்குரிய பந்து வீச்சாளரான லசித் மலிங்க இல்லாத நிலையில் இலங்கை அணி பங்கெடுத்த போட்டிகளில் இலங்கையின் பந்துவீச்சு பலமிழந்து இருந்தமையை யாரா லும் மறுக்க முடியாததே

மலிங்க தனி ஒருவராக அணிக்கு வெற்றி களை தேடிக் கொடுத்தார் என்ற கருத்து இல் லாவிட்டாலும் மிக முக்கியமான கட்டங்களில் ஓட்டங்களை கட்டுபடுத்துதல், விக்கெட்டுகளை தகர்த்தல் என்ற அடிப்படையில் ஓர் ஆயுத மாக மலிங்க பயன்படுத்தப் பட்டு அணி தோல் வியின் விளிம்பில் இருந்த தருணங்களிலும் வெற்றியை தேடிக் கொடுத்தவர்.

ஆயினும் உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னர் நியு+சிலாந்து அணிக்கெதிரான 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி 2 போட்டிகளில்தான் மலிங்கவால் மீள வும் போட்டிகளில் பங்கெடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது

எது எப்படியாயினும் பு+ரண உடற்தகுதி நிலை பெற்று மலிங்க உலக கிண்ண போட் டிகளில் இலங்கையின் வெற்றிகளுக்கு உறு துணை புரிவார.;

இதைவிடவும் இலங்கையின் இன்னுமொரு பிரதான வேகபந்து வீச்சாளர் நுவான் குல சேகர இங்கிலாந்து அணிக்கெதி ரான இலங்கை அணியிலிருந் தும் ஓரக்கட்டப்பட்ட நிலையி லேயே இப்போது இவரது அனு பவத்தை கருத்தில் கொண்டு மீளவும் குலசேகரவுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கபட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சு வீசக்கூடிய சகலதுறை வீரர்களாக அணித் தலைவர் மத்தியுஸ்,திஸசர பெரேரா ஆகிய வீரர்கள் அணி யில் இருக்கின்றமை வேகபந்து க்கு சாதகாமான ஆடுகளங்க ளில் நல்ல பலன் கிடைக்கு மென எதிர்பார்க்கலாம்.

சுழல் பந்து வீச்சாளர்களை பொறுத்த வரையில் முக்கிய தெரிவாக ரங்கன ஹேரத், மற்றும் சச்சித்திர சேனநாயக்க ஆகியோரோடு சேர்த்து சுழல் பந்து சகலதுறை வீரர் ஜPவன் மெண்டிசும் அணியில் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இலங்கை உத்தேச அணி

அஞ்சேலோ மத்தியுஸ் (அணித் தலைவர்), லகிரு திரிமான்ன (உதவி அணித் தலைவர்), திலகரத்ன டில்'hன், குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, தினேஷ் சந்திமால், திமுத் கருணா ரத்ன, ஜPவன் மென்டிஸ், திஸ்சர பெரேரா, சுரங்க லக்மால், லசித் மாலிங்க, தம்மிக்க பிரசாத், நுவான் குலசேகர, ரங்கன ஹேரத், சசித்திர சேனநாயக்க.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி