ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 

எம்ஜpஆர் கையால் ஆட்டோ பெற்ற இயக்குநர் கார்வண்ணன் மரணம்

எம்ஜpஆர் கையால் ஆட்டோ பெற்ற இயக்குநர் கார்வண்ணன் மரணம்

இயக்குநர், நடிகர் கார்வண்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55. பாலம், புதிய காற்று, மூன்றாம் படி, தொண்டன் உட்;பட 6 படங்களை இயக்கியவர் கார்வண்ணன். இவர் சில படங்களைத் தயாரித்துமிருக்கிறார். இவர் எடுத்த அனைத்துப் படங்களுமே புதிய வி'யங்களை மையப்படுத்தியிருக்கும். பாலம் படத்தில்தான் பாமக நிறுவனர் டொக்டர் ராமதாஸ் முதல் முறையாக சினி மாவில் நடித்தார்.

இவர் எம்ஜpஆர் கையால் ஆட்டோ பெற் றவர். கார்வண்ணனின் புதிய காற்று படத் தைத் தழுவி வந்த படம்தான் இயக்குநர் 'ங்கரின் இந்தியன் என்பார்கள். கார்வண்ணனின் இளமை பின்னணி மிகுந்த சுவாரஸ்யமானது. அவர் நந்த னம் கல்லூரியில் எம்ஏ படித்தபோது, அன்றைய முதல்வர் அமரர் எம்ஜpஆர் கையால் பரிசு பெற்றிருக்கிறார். பின் னொரு நாள் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த முதல்வர் எம்ஜpஆர் பார் வையில் அவர் பட்டுவிட, காரை நிறுத்தி, தன் உதவியா ளரை அனுப்பி கார்வண் ணனை அழைத்து வரச் சொன்னாராம் எம்ஜpஆர்.

அவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு, பரிசு பெறும் அளவு நன்றாகப் படித்த மாணவனான நீ, இப்போது என்ன செய்கிறாய் என விசாரித் தாராம். வேலை யில்லாமல் அலைந்து கொண்டிருப்பதை கார்வண்ணன் சொன்ன தும், முகவரியை வாங்கிக் கொண்டு இறக் கிவிட்டாராம். அடு த்த சில தினங்களில் அன்றைய போக்குவர த்து துறை அமைச் சர் முத்துசாமி மூலம் ஒரு புதிய ஆட் டோவை கொடுத்தனுப்பியுள்ளார். எம்ஜp ஆர். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்வரை அந்த ஆட்டோவை ஓட்டி பிழைத்துக் கொள்ளச் சொல்லியிருக் கிறார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1990-ல் திரைப்பட இயக்குனரானார் கார்வண்ணன்.

அப்போது எம்ஜpஆர் அமரராகிவிட்டிருந்தார். அந்த ஆட்டோவை இப்போதும் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருக்கிறார் கார்வண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி