ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 

இந்தியாவின் தங்கம் தேவை 900 தொன்

இந்தியாவின் தங்கம் தேவை 900 தொன்

நடப்பு ஆண்டில் (2015) இந்தியா வின் தங்கம் தேவை 900 தொன் னாக இருக்கும் என்று மதிப்பீடு செய் யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தங்கத்தை அதிகளவில் பயன்படுத்தும் நாடுக ளில் சீனாவும் அதற்கு அடுத்ததாக இந்தியாவும் தான் உள்ளது. இந்நி லையில் கடந்த ஆண்டு இந்தியா வில் ஆபரண தங்கம் மற்றும் அது தொடர்பான முதலீடு என்பது 842.7 தொன்னாக இருந்தது.

அதே நேரத்தில் சீனா 813.6 தொன் அளவிற்கு மட்டுமே நுகர்வு செய்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் (டபிள்யு+ஜpசி) தெரிவித்துள் ளது.

2013ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு இந்தியாவின் தங்கம் தேவை 14 சதவீதம் குறைந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி