ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

நியு+சிலாந்து அணி 192 ஓட்டங்களுக்கு சுருண்டது

2-வது டெஸ்ட் போட்டி:

நியு+சிலாந்து அணி 192 ஓட்டங்களுக்கு சுருண்டது

இரு அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர்; டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.இந்திய அணியில் மாற்றம் செய்யப் படவில்லை. நியு+சிலாந்து அணியில் லதம், நீசம் ஆகியோர் அறி முகமானார்கள். நியு+சிலாந்து அணி 192 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இ'hந்த் சர்மா பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவரது பந்தில் தொடக்க வீரர்கள் புல்டன் (13 ரன்), ரூதபோர்ட் (12 ரன்) ஆட்டமிழந்தனர். அதன்பின் லதமை (0 ரன்) இ'hந்த் சர்மா வெளியேற்றினார். முதல் டெஸ்ட் டில் இரட்டை சதம் அடித்த நியு+சிலாந்து தலைவர் மெக்கல்லம் 8 ஓட்டங்களில்; முகமது சமி பந்தில் ஆட்டமிழந்தாhர். அப்போது ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 45 ஓட்டமாக இருந்தது இருந்தது. அதன்பின் வில்லியம்சன்- அண்டர்சன் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்தது.

அண்டர்சன் (24 ரன்), வாட்லிங் (0 ரன்) ஆகியோர் இ'hந்த் சர்மா பந்தில் வீழ்ந்தனர். அப்போது நியு+சிலாந்து 6 விக்கெட்டுக்கு 86 ஓட்டங்களாக இருந்தது. அடுத்து வில்லியம்சன்- நீசம் ஜோடி துரிதமாக ஓட்டங்களை சேர்த ;தது. வில்லியம்சன் 47 ஓட்டங்களையும், நீலும் 33 ஓட்டங்களையும் பெற்ற போது ஆட்டமிழந் தனர்;. இருவரது விக்கெட் டையும் முகமது சமி கைப்பற்றினார்.

அதன்பின் இ'hந்த் சர்மா பந்தில் டிம் சவுத்தி (32 ரன்) வெளியேற்றினார். கடைசி விக்கெட்டாக போல்ட் விக் கெட்டை முகமது சமிபந்தில் வீழ்ந்தார்.

இ'hந்த் சர்மா 6 விக்கெட்டும், முகமது சமி 4 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் இந்திய அணி முதல் இன்னிஸ்சை விளையாடியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், 'pகர் தவான் களம் இறங்கினர். தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.

முரளி விஜய் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டிம் சவுத்தி வீசிய பந்தை அடிக்காமல் விக்கெட் காப்பாள ரிடம்; விட முயற்சித்த போது பந்து கையுறையில் உரசி யபடி சென்று பிடி ஆனது. அடுத்து 'pகர்;தவான் 71 ஓட்டங்களுடனும் புஜhரா 19 ஓட்டங்களுடனும் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறாரகள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நியு+சிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது. 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதல் டெஸ்டில் இந்தியா 40 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி