ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

அம்பாறை மாவட்ட சமாதான ஹொக்கி பயிற்சி முகாம்

அம்பாறை மாவட்ட சமாதான ஹொக்கி பயிற்சி முகாம்

இலங்கையின் 66வது சுதந்திர தினத்தையொட்டி காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகம் மனித அபிவிருத்தி தாபனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட சமாதான ஹொக்கி பயிற்சி முகாம் அங்குரார்பண நிகழ்வு அண்மையில் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழக தலைவர் தவராஜh லவன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.nஜகராஜன் , 24 வது படைப்பிரிவின் உதவி மாவட்ட தளபதி கேர்ணல் மாயாதுன்ன , சமாதானத் திற்கான சமயங்களின் இலங்கை பேரவையின் மாவட்ட தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.nஜமீல் , செயலாளரும் பிரதி கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.சகாதேவராஜh உட்பட ஹொக்கி லயன்ஸ் கழக உறுப்பினர்களும் பயிற்றுவிப்பாளர்களும் மனித அபிவிருத்தி தாபன உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி முகாமில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த மூவின மாணவர்களும் கலந்து கொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி