ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

48ஆவது ஆசிய ஆணழகன் போட்டி கொழும்பில்

48ஆவது ஆசிய ஆணழகன் போட்டி கொழும்பில்

இலங்கை உட்கட்டமைப்பு சம்மேளனம் ஆசிய உட்கட்டமைப்பு சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யும் சர்வதேச ஆணழகன் போட்டித் தொடர்பாக கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகா நாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத் துறை பணிப்பாளர் நாயகம் திருமதி ரஞ்சனி ஜயகொடி, ஆசிய உட்கட்டமைப்பு சம்மேளன செயலாளர் தாரிக் உமார் மற்றும் இலங்கை உட்கட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்ட போது.
(படம் : வட கொழும்பு குறூப் நிருபர்)

இலங்கை உட்கட்டமைப்பு சம்மேளனம் ஆசிய உட்கட்டமைப்பு சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யும் 48 வது ஆசிய ஆணழகன்போடடி, ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் 22 வரை கொழும்பில் நடைபெறும்.

ஆசிய நாடுகளைச் சேர்ந்த 290 போட்டியாளர்கள் இதில் பங்குகொள் கின்றனர். போட்டியின் சின்னத்தை உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்யும் வைபவம் கடந்த வாரம் விளை யாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டுத் துறை பணிப்பாளர் நாயகம் திருமதி ரஞ்சனி ஜயகொடி, இலங்கை உட்கட்டமைப்பு சங்கத் தலைவர் கபில குமார, செயலாளர் என். எஸ். ஜயவர்தன மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு சம்மேளன செயலாளர் தாரிக் உமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது உரை நிகழ்த்துகையில், கடந்த காலங்களில் 17 சர்வதேச விளையாட்டு போட்டிகள் இலங்கையில் நடைபெற்றதுடன் ஏனைய நாடுகளைப் பொறுத்த மட்டில் சர்வதேச போட்டிகளுக்கான முக்கிய இடத்தில் இலங்கை திகழ்கின்றமையிட்டு பெருமையடைவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை உட்கட்டமைப்பு சங்கத் தலைவர் கபிலகுமார இதன் போது கருத்து தெரிவிக்கையில், சர்வதேச ஆணழகன் போட்டியொன்று இலங்கையில் நடைபெறுகின்றமை இதுவே முதல் தடவையெனவும், இச் சந்தர்ப்பத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்த விளையாட்டுத் துறை அமைச்சருக்கு நன்றி கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி