ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

கொழும்புக் கம்பன் கழக கவிதை பேச்சுப் போட்டி முடிவுகள்

கொழும்புக் கம்பன் கழக கவிதை பேச்சுப் போட்டி முடிவுகள்

கொழும்புக் கம்பன் கழகத்தின் 2014ஆம் ஆண்டிற்கான கம்பன் விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அமரர் துரை. விஸ்வநாதன் அவர்களின் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி மற்றும் அமரர் பொன். பாலசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தக் கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றோரின் பெயர் விவரங்களை. கொழும்புக் கம்பன் கழகம் அறிவித்துள்ளது. அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இப் போட்டிகள் கீழ், மத்திய, மேற் பிரிவுகளில் நடாத்தப்பட்டன. போட்டியாளர்களுக்கான தேசிய மட்டத்திலான இறுதிப்போட்டிகள் கடந்த 18.01.2014 மற்றும் 19.1.2014 சனி, ஞாயிறு தினங்களில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றன. இப் போட்டிகளில் கலந்து கொண்டு பிரிவு ரீதியாக வெற்றிபெற்றோரின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:-

அமரர் துரை விஸ்வநாதன் அவர்களின் ஞாபகார்த்த, பேச்சுப்போட்டி முடிவுகள்

கீழ்ப்பிரிவு

முதலாம் இடம் - உதயசெல்வம் லக்ஷன் (கொழும்பு)

இரண்டாம் இடம் - சு. அனந்தநாராயண சர்மா (கொழும்பு)

மூன்றாம் இடம் - செல்வி. ஜெயரஞ்சித் அம்ரிதா (மட்டக்களப்பு)

மத்திய பிரிவு

முதலாம் இடம் - செல்வி சனாதனி குகராசன் (கொழும்பு)

இரண்டாம் இடம் - செல்வன் எஸ். சஜிஸ்ணவன் (கொழும்பு)

மேற்பிரிவு

முதலாம் இடம் - செல்வி வின்சன்ற் பிரியதர்சினி (கொழும்பு)

இரண்டாம் இடம் - கணேசலிங்கம் கனகேந்திரன் (வவுனியா)

அமரர் பொன். பாலசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்த, கவிதைப் போட்டி முடிவுகள்

கீழ்ப்பிரிவு

முதலாம் இடம் - செல்வி சுருதினி தயாளகுணநாதன் (கொழும்பு)

இரண்டாம் இடம் - செல்வி சகானா சிவசுப்பிரமணியம் (கொழும்பு)

மூன்றாம் இடம் - செல்வி வைஷாலினி குணரட்ணம் (கொழும்பு)

மத்திய பிரிவு

முதலாம் இடம் - செல்வி சிவானந்தம் சோபனா (யாழ்ப்பாணம்)

இரண்டாம் இடம் - செல்வி முத்துக்குமாரு உமாகாயத்திரி (கொழும்பு)

மூன்றாம் இடம் - செல்வி ஹரிதர்சினி தமிழ்மணி (கொழும்பு)

செல்வி ஸ்மிர்த்திகா சந்திரசேகர் (கொழும்பு)

மேற்பிரிவு

முதலாம் இடம் - செல்வி வி. மாதினி (கொழும்புப் பல்கலைக்கழகம்)

இரண்டாம் இடம் - செல்வி பாத்திமா ரிஸ்னா (கல்வித் திணைக்களம், பத்தரமுல்ல)

மூன்றாம் இடம் - செல்வி வைஷ்ணவி பைரவமூர்த்தி (கொழும்பு)

வெற்றிபெற்றோர்க்கான பரிசளிப்பு எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ள கம்பன் விழாவின் முதலாம் நாள் நிகழ்வில் இடம்பெறும் எனக் கம்பன் கழகம் அறிவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி