ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

கருங்கல்லில் தெய்வச் சிலைகளை வடிப்பது ஏன்?

கே. ஈஸ்வரலிங்கம்

கருங்கல்லில் தெய்வச் சிலைகளை வடிப்பது ஏன்?

10612) எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மையுடையது எது? கருங்கல்

10613) உலோகத்தின் ஆற்றலைவிட பல மடங்கு அதிகமான ஆற்றலைக் கொண்டது எது? கருங்கல்

10614) கருங்கல்லில் உள்ள வேறு சிறப்பு என்ன?

கருங்கல்லில் நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் எனும் பஞ்ச பூதத் தன்மைகள் அடங்கியுள்ளன.

10615) இவ்வாறான பஞ்ச பூதத் தன்மைகள் கொண்ட உலோகம் உண்டா?

இல்லை

10616) கல்லிலே நீர் உள்ளதா?

ஆம். அதனால்தான் அது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது

10617) கல்லில் நிலம் உள்ளதா?

ஆம். அதனால்தான் கல்லில் செடிகொடிகள் வளர்கின்றன.

10618) கல்லில் நெருப்பின் அம்சம் உள்ளதா?

ஆம். அதனால்தான் கற்களை உரசினல் தீப்பொறி பறக்கிறது

10619) கல்லில் காற்று உண்டா?

ஆம். அதனால்தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கின்றது.

10620) கல்லுக்கும் ஆகாயத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

ஆகாயத்தைப் போல, வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.

10621) கல்லிலே இவ்வாறான தன்மை இருப்பதால் கருங்கல்லிலே நடப்பட்ட கோவில்களில் என்ன நடக்கிறது.

நாம் கூறுவது எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.

10622) இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை செய்யும் போது என்ன நடக்கும்?

பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கும்.

10623) இவ்வாறு பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிப்பதால் என்ன நடக்கும்?

அக்கோயிலில் நாம் வணங்கும் போது நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி அதன் மூலம் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி