ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்டகொங்கில்

இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்டகொங்கில்

இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி இன்று சிட்டகொங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை வென்ற இலங்கை தொடர் வெற்றி எதிர்பார்ப்புடனும் பங்களாதேஷ் தொடர் தோல்வியை தவிர்க்கும் நோக்குடனும் களமிறங்கவுள்ளன. எனினும் முதல் டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்த பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்டை எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது வெறும் கேள்வியாக உள்ளது.

மறுபுறத்தில் இரு முக்கிய வீரர் காயத்திற்கு உள்ளான நிலையிலேயே இலங்கை பங்களாதேi' எதிர்கொள்கிறது. முழங்கால் காயத்திற்கு உள்ளாகி யிருக்கும் ரங்கன ஹேரத் இன்றைய டெஸ்டில் களமிறங்குவது சந்தேகமே. அதேபோன்று 'மிந்த எரங்கவும் உபாதையால் அவதிப்படுகிறார்.

இதில் கடந்த 2010 ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற நான்கு டெஸ்ட் தொடர்களில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் தொடரை சம நிலையில் முடித்து பின்னடைவை சந்தித்திருக்கிறது. இந்த வரலாற்றை கருத்தில் கொண்டே இலங்கை சிட்டகொங் டெஸ்டில் விளையாடும் என எதிர்பார்க்கலாம்.

சிட்டகொங் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கமல் மந்தமாகவும் தட்டையாகவும் காணப்படுகிறது. எனவே முதல் டெஸ்ட் போன்றே இந்த டெஸ்டும் அதிக ஓட்டங்கள் குவியும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த டெஸ்டில் ஹேரத், எரங்கவுக்கு பதில் நுவன் பிரதீப் மற்றும் அஜந்த மெண்டிஸ் இலங்கை அணியில் இடம்பிடிப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோன்று பங்களாதேஷ் மூன்றாம் வரிசை வீரர் மார்'ல் அயுப் கடந்த 5 டெஸ்ட்களில் அரைச்சததை கூட பெறாத நிலையின் இன்று ஆரம்பமாகும் போட்டியில் அவருக்கு பதில் இம்ருல் கைஸ் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று ருபல் ஹொஸைன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் மஹ்முதுல்லாஹ் அல்லது அப்துர்ரஸ்ஸாக் சேக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சிட்டகொங் அரங்கில் பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் மொத்தம் 5 சதங்களை பெற்றுள்ளனர். இங்கு கடைசியாக இடம்பெற்ற டெஸ்டில் இரு பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் சதம் அடித்தனர். அதேபோன்று இலங்கை முன்னணி வீரர் குமார் சங்கக்கார பங்களாதே'{க்கு எதிராக கடைசியாக விளையாடிய 5 இன்னிங்ஸ்களிலும் 50 ஓட்டங்களை கடந்துள்ளார்.

இலங்கை அணித்தலைவர் அஞ்ஜலோ மத்தியு+ஸ் விளையாடிய கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளினதும் ஓட்ட சராசரி 99.60 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி