ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

பிணையில் விடுதலையானார் உமர் அக்மால்

பிணையில் விடுதலையானார் உமர் அக்மால்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் உமர் அக்மல் (23) பாகிஸ்தான் வீரர்கள் கம்ரான் அக்மலின் இளைய சகோதரர், இவர், பாகிஸ்தானின் குல்பர்க் மார்கெட் பகுதியில், போக்குவரத்து விதியை மீறி வேகமாக வந்துள்ளார். இதை கண்டித்த ஜீஷன் என்ற பொலிஸ் காரை தாக்கி, அவரது சீருடையை கிழித்தார்.

இதனால் பொலிஸ் ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்ட உமர் அக்மல் மீது 3 வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஒரு நாள் முழுவதும் ஸ்டேஷனில் இருந்துள்ளார். இதனையடுத்து சொந்த ஜாமினில் வெளிவந்துள்ளார்.

வந்தவுடன் குடும்பத்தினர் கொண்டு வந்திருந்த காரில் ஏறி வீட்டிற்கு சென்றார். தவிர பொலிஸாரை எதிர்த்து இவரின் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது குறித்து அக்மால் கூறுகையில், நாங்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல.

எங்களுக்கும் சட்டத்தை மதிக்க தெரியும் அதே நேரம் ஒரு குற்றத்திற்காக மற்றவர்களை போல விளையாட்டு வீரர்களை நடத்தக் கூடாது என்றார்.

உமர் தந்தை முகமது அக்மல் கூறுகையில், “பிணை வாங்க தாமதம் ஆனதால்தான், உமர் நாள் முழுவதும் பொலிஸ் ஸ்டேஷனில் இருக்க வேண்டிய தாயிற்று இது எதிர்பா ராமல் நடந்துவிட்டது என்றார்.

குல்பர்க் ஸ்டேஷன் பொலிஸ் அதிகாரி ஜாகித் கூறுகையில், “சொந்த பிணையில் உமர் விடுதலை செய்யப்பட்டுள் ளார். ஆனால், இன்று நீதிமன்றில் ஆஜர் படுத்தும் போதுதான் இது உறுதி செய்யப்படும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி