ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

சோனியாவை சரிகட்டினால் பேரம் முடியும் ஹெலிகொப்டர் ஊழலில் திடுக்கிடும் தகவல்

சோனியாவை சரிகட்டினால் பேரம் முடியும் ஹெலிகொப்டர் ஊழலில் திடுக்கிடும் தகவல்

வி. வி. ஐ. பி. கள் பயணிப்பதற்கான ஹெலிகொப்டர் ஒப்பந்தத்தை இந்தியாவிடமிருந்து பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சரிகட்ட வேண்டும் என இடைத்தரகர் ஒருவர் ஹெலிகொப்டர் நிறுவன அதிகாரியிடம் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் போன்ற வி. வி. ஐ. பி. கள் பயணிக்க, அதிநவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட, ஹொலிகொப்டர்கள் வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது.

இத்தாலியைச் சேர்ந்த ‘அகஸ்டா வெஸ்ட்லாண்ட்’ என்ற ஹொலிகொப்டர் நிறுவனத்திடம் 12 ஹெலிகொப்டர்கள் கொள்முதல் செய்ய 2010ல், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம், 3,600 கோடி ரூபாய் மதிப்பிலானது. இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு ஹெலிகொப் டர்கள், ஏற்கனவே நம் நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டன. பத்து ஹெலிகொப்டர்கள் வரவிருந்த நிலையில், இதில் ஏராளமாக கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அம்பலமானது.

இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இத்தாலி நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, சி. பி. ஐ. விசாரணை நடத்தி வருகிறது. விமானப் படை முன்னாள் தளபதி, தியாகி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இத்தாலி பொலிசாரும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை கைதுசெய்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தை, மத்திய அரசிடமிருந்து, அந்த நிறுவனத்துக்கு பெற்றுத் தருவதற்காக, இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலை யில், கிறிஸ்டியன் மைக்கேல் என்ற இடைத்தரகர், அகஸ்டா வெஸ்ட் லாண்ட் நிறுவனத் தின், இந்திய அலுவ லகத்தில் பணியாற் றிய, பீட்டர் புல் லெட் என்பவ ருக்கு ஒப்பந்த விவகாரங்கள் நடந்தபோது, முக்கிய மான ‘பெக்ஸ்’ ஒன்றை அனுப்பியுள் ளார்.

அதில், ‘இந்தியாவிடமிருந்து, ஒப்பந்தத்தை பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், இப்போதைய ஜனாதிபதியும், அப்போதைய மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள், வீரப்ப மொய்லி, அஸ்கர் பெர்னாண்டஸ், மேற்கு வங்க ஆளுனர் எம். கே. நாராயணன், வினய் சிங் என்பவர் உள்ளிட்டோரை அணுகலாம்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தகல்கள், அதில் இடம்பெறவில்லை. இந்த பெக்ஸின் நகலை, இத்தாலி பொலிசார் கைப்பற்றி அங்குள்ள நீதிமன்றில் கடந்த மாதம் தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து, இந்தத் தகவல், வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. இதன் நகலை, இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் இந்திய அதிகாரிகளிடம், இத்தாலி பொலிசார் அண்மையில் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நம் அரசியல் தலைவர்களை சிறுமைப்படுத்தும் விதத்தில், இத்தாலி தரகர் எழுதிய குறிப்பு, அரசியல் வட்டாரத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து, பா. ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்கா கூறியதாவது : நாட்டையே உலுக்கிய, ‘போபர்ஸ்’ பீரங்கி பேர ஊழல் போல், ஹெலிகொப்டர் ஊழலும் நடந்துள்ளது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணம் கொடுக்கப்பட் டுள்ளது. இத்தாலி தரகர் தெரிவித்த தகவலில், இந்த விபரங்கள் இடம்பெற் றுள்ளன. இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம். இது குறித்து முழு உண்மைகளை அறியாமல் விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி