ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29

இன்றைய சுதந்திர தினத்தில் மக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

இன்றைய சுதந்திர தினத்தில் மக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

இலங்கையின் 66வது சுதந்திரதினம் இன்று கேகாலை நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் கோலாக லமாக கொண்டாடப்படுகிறது.

இதற்கென கேகாலை மாநகரம் விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தினத்திற்கான பிரதான இராணுவ அணிவகுப்பு மரியாதைகளும், மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

சுதந்திர தினத்தின் போது, மக்களுக்கு பூரண பாதுகாப்பு அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது. இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான கேகாலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களை ஒழுங்கு செய்ததன் மூலம் அரசாங்கம் கொழும்பு மாநகரத்தில் மாத்திரம் பல்லாண்டு காலம் இந்த சுதந்திர தின விழாக்களை கொண்டாடும் சம்பிரதாயத்தில் இருந்து விலகி, கடந்த ஆண்டு திருகோணமலையிலும் இவ்வாண்டு கேகாலையிலும் நடத்தியது பாராட்டுக்குரியது.

இந்நாட்டு மக்கள் அனைவருமே கொழும்பு மாநகரில் வாழவில்லை. நாடெங்கிலும் பரந்து வாழ்கிறார்கள். ஆகவே இனிமேல் மக்கள் வாழும் பிரதேசங்களில் சுதந்திரதினக் கொண்டாட்டங்களை வருடாந் தம் நடத்த வேண்டுமென்ற புதிய சம்பிரதாயத்தை ஜனாதிபதி அவர் கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்தத் தடவை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மெருகூட்டும் வகை யில் எதிர்வரும் 20ம் திகதி முதல் தேசத்திற்கு மகுடம் தேசிய அபி விருத்தி கண்காட்சியும் குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய நகரத்தில் நடைபெறவுள்ளது. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைப்பார்.

இந்தியா, சீனா, வடகொரியா போன்ற ஆசியாவின் பொருளாதார ரீதியில் வல்லரசுகளாக வளர்ந்து வரும் நாடுகளில் அந்நாட்டின் சுதந்திரதினம், தேசிய தினம் அல்லது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடத்தப் படும் போது, அந்தந்த நாடுகள் தங்களின் இராணுவப் பலத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டும் முகமாக இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுண்டு.

இலங்கையின் சுதந்திர தினத்தன்றும் எமது அரசாங்கத் தலைவர்கள் எமது பாதுகாப்பு படைகளினதும், பொலிஸ்படையினதும் வலுவை யும், அவை தேசப்பற்றுடன் எவ்விதம் தங்கள் கடமைகளை நிறை வேற்றுகின்றன என்பதையும் உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்ட விரும்புகின்ற போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இன்றைய அரசாங்கம் எங்கள் சுதந்திர தினத்தன்று நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொனிப் பொரு ளுடன் மக்கள் அனைவரும் இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டுடன், நாட்டுப் பற்றுடன் ஐக்கியமாகி செயற்பட வேண்டுமென்ற தொனிப் பொருளை வலுப்படுத்தக்கூடிய வகையில் சுதந்திரதின கொண்டாட் டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன.

நாட்டின் நாலா பக்கங்களிலும் உள்ள பாடசாலை பிள்ளைகள் மற்றும் கலை, இலக்கிய, நாடக, இசைத்துறையைச் சேர்ந்தவர்களும் இன் றைய சுதந்திர தின கொண்டாட்டங்களில் தங்கள் முழு மனதுடனான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மலையகம் என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் பாடசாலை மாணவ, மாணவிகள் இந்த சுதந்திரதின வைபவத்தில் கலந்து கொண்டனர்

இத்தகைய மகத்தான சுதந்திர பேரணிகளை ஒழுங்கு செய்ததன் மூலம் நம்நாட்டு மக்களிடையே இருந்துவரும் இனவாதம், பிரதேசவாதம், மொழிவாதம் ஆகியவற்றை பூரணமாக ஒழித்துக் கட்டி, மக்கள் அனைவரும் தாங்கள் இலங்கையர் என்ற நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டுமென்ற உன்னத இலட்சியத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நம்நாட்டு மக்களுக்கு இந்த சுதந்திர தினம் ஒரு அரிய வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

சுதந்திர தினமான இன்று அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை பறக்கவிடுவது மிகவும் அவசியமாகும். எங்கள் தேசியக் கொடி, நாட்டின் இறைமையையும், சுயாதிபத்தியத்தையும் பிரதிபலி க்கும் ஒரு சின்னமாகும். அந்த தேசியக் கொடியை பார்த்தவுடன் இந் நாட்டு மக்கள் அனைவர் மனதிலும் தேசப்பற்று வலுவூன்றி, நாடு எங்களு க்கு எதைச் செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கு பதிலாக நாங்கள் நாட்டுக்கு எதை செய்ய வேண்டுமென்ற புதியதோர் சிந்த னையை ஏற்படுத்துவதற்கு ஓர் அரிய சந்தர்ப்பத்தை அளிப்பதாக அமையும்.

அமெரிக்கர்கள் எங்கு சென்றாலும் நாங்கள் அமெரிக்காவின் பிரஜைகள் என்றும் சீனர்கள் நாம் சீன நாட்டவர்கள் என்றும் இந்தியப் பிர ஜைகள் தாங்கள் வாழும் மாநிலம், தாங்கள் பேசும் மொழி, கடைப் பிடிக்கும் சமயம் என்ற பாகுபாடுகளை மறந்து, எப்போதும் மார்பை தட்டிக் கொண்டு தான் இந்தியன் என்று கூறி பெருமைப்படுவார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுத்தத்தை வெற்றிகரமாக முடி த்த பின்னர் நாட்டில் சமாதானத்தையும், அமைதியையும் மக்களி டையே இன ஐக்கியத்தையும் ஏற்படுத்தி பரஸ்பர சந்தேகங்கள் மற்றும் பகைமைகளை மறக்கச் செய்துள்ளார்.

அதி உன்னத தேசத் தலைவரின் கீழ் நம்நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் குறுகிய பேதங்களை மறந்து நாம் அனைவரும் இலங் கையர் என்று மார்பை தட்டிக் கொண்டு மகிழ்ச்சியோடு கூறும் ஒரு நாள் மிகத் தூரத்தில் இல்லையென்று நாம் நம்புகிறோம்.

இதுவரை காலமும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் நாட்டின் பாது காப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இப்போது பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட்டிருப்பதனால் ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்திரு க்கும் அபிவிருத்தி யுகம் வெற்றிவாகை சூடுவதற்கு மக்களின் பூரண பங்களிப்பு அவசியம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி