ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

அமைதி, ஐக்கியம் நிறைந்த நாட்டில் அர்த்தபுஷ்டியான 66வது சுதந்திர தினம்

அமைதி, ஐக்கியம் நிறைந்த நாட்டில் அர்த்தபுஷ்டியான 66வது சுதந்திர தினம்

சீமைதி, சமாதானம் நிலவும் சுதந்திரமான ஒரு சூழலில் இன்று இலங்கையின் 66 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சகல இன, மத மக்களும் நிம்மதியாக நாட்டின் எப்பகுதியிலும் வாழவும் தெற்கின் தேவேந்திர முனை முதல் வடக்கில் பருத்தித்துறை வரை எவரும் எப்போதும் சென்று வரக்கூடியதுமான சூழலானது நாட்டின் சுதந்திரத்தை தெளிவாக உறுதிப்படுத்துகின்றது.

மூன்று தசாப்த யுத்தம் இங்கைத் திருநாட்டை மிக மோசமான அழிவுக்குட்படுத்தியிருந்தது. வடக்குக் கிழக்கில் மட்டுமே யுத்தம் இடம்பெற்றிருந்தபோது நாட்டில் சகல பிரதேசங்களையும் அது பாதிப்புக்குள்ளாக்கியது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் யுத்தத்தின் அவலங்களையும் பாதிப்புக்களையும், அனுபவித்தனர். நாடு அபிவிருத்தியில் பின் தள்ளப்பட்டு அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்து இருந்தன. பயமும் அச்சமும் சகலரையும் பாதித்தன.

பாடசாலை செல்லும் மாணவர்களின் புத்தகப்பையையும் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த காலமது. எந்த நேரம் எங்கு குண்டு வெடிக்குமோ என்ற பயத்திலும் சந்தேகத்திலும் கணவன் ரயிலிலும் மனைவி பேரூந்திலும் தனித் தனியாகக் கடமைக்குச் சென்ற காலம் அது.

வீதியெங்கும் சோதனைச்சாவடிகள் அவசரப் பயணங்கள் செல்லும்போது அங்கு இறக்கப்பட்டு அனைவரும் சோதனைக்குட்ப டுத்தப்படும்போது அதற்குச் செலவான காலம் அதிகம். பிள்ளைகளை பாடசாலைக்குக்கொண்டு சென்று விட்டு விட்டு பாடசாலை வாசவில் பெற்றோர் காவல் செய்த காலம்.

அந்த யுகத்துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அத்தகைய நிலைமைகள் மாற்றப்பட்டு விட்டன. முப்பது வருடங்கள் யுத்தம் நடைபெற்றாலும் மிகக் குறுகிய காலத்திலே இத்தகைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விட்டன.

இந்த மூன்று தசாப்த காலத்தில் எத்தனையோ தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்த போதிலும் கொடூர யுத்தத்திற்கு துணிச்சலுடன் முடிவு கட்டியவர் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களாவார். எத்தனை செல்வங்கள் ஒரு நாட்டில் இருந்தாலும் என்னென்ன நிறைவுகள் மக்களுக்கு கிட்டினாலும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை அந்த நாட்டில் இல்லாவிட்டால் அவை அனைத்துமே பயனற்று போகும்.

கடந்த காலங்களில் இந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் அவை பயனளிக்கவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுத்தத்தின் யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு பொருத்தமான வழிமுறைகளை கையாண்டு துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுத்த முயற்சியானது திருவினையாகியுள்ளது. யுத்தம் முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நாடு தற்போது அமைதியிலும் சமாதானத்திலும் திளைத்துள்ளது. யுத்தத்தால் அழிவுற்ற பிரதேசங்கள் வெகு விரைவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. யுத்த சூழலினால் இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர்.

அவர்களுக்கான வீடு உட்பட அடிப்படை வசதிகள பெற்றுக்கொள்ள ப்பட்டுள்ளன. நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போலவே யுத்தம் நடைபெற்ற வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக தேர்தல்கள் நடத்தப்பட்டு அப்பகுதி மக்கள் தாம் விரும்பும் தலைவர்களை தாமே தெரிவு செய்துகொள்வதற் கான வாய்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

குறிப்பாக ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் வடக்குக், கிழக்குப் பிரதேசங்கள் துரித அபிவிருத்தி கண்டு வருவதை காணமுடிகிறது. வடக்குக் கிழக்குக்குச் செல்லும் பிரதான பாதை புனரமைக்கப்பட்டு ‘காபட்’ செய்யப்பட்டு பிரதான நகரங்களிலிருந்து சில மணித்தியாலங் களிலிருந்து அங்கு பயணிக்கக் கூடிய வசதிகள் உருவாக்கப்பட் டுள்ளன.

விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் துறைகள் வடக்கு கிழக்கில் மீளக் கட்டியெழுப்ப ப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்துக் கான வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொ டுக்கப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் மிகத்துரிதமாக பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.

உலகில் யுத்தம் நடைபெற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இத்தகைய துரித மாற்றங்கள் இலங்கையிலேயே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று தசாப்தங்கள் அபிவிருத்தியில் பின்னடைவு கண்டிருந்த நாட்டில் சகல துறைகளும் இன்று அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

நாட்டில் 98 சதவீத மக்கள் தற்போது மின்சாரத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பல ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு பல்வேறு சலுகைகள், மானியங்கள் மற்றும் ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. நாடு அரசியலில் தன்னிறைவு கொண்டுள்ள அதேவேளை மொத்த உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

புதிய துறைமுகங்கள், புதிய விமான நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பொதுநலவாய நாட்டை இலங்கையில் சிறப்புடன் நடத்தும் வகையில் நாடு முன்னேற்றம் கண்டதுடன் மாநாட்டுக்கு வருகை தந்த சர்வதேச தலைவர்கள் பாராட்டும் வகையில் நாடு அபிவிருத்தி அடைந்துள்ளமையை குறிப்பிடலாம்.

இன்றைய நாளை மட்டும் கருத்தில் கொண்டு எதிர்கால இளம் தலைமுறையினரின் சுபீட்சத்துக்கான பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதைக் குறிப்பிட முடியும்.

தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டங்களுக்கு வெற்றிகரமான தீர்வு காணப்படு வருகின்றது. கடந்த பத்து வருடங்களுக்கு முன் நாட்டின் கணனி அறிவு பெற்றவர்கள் வெறும் 5% வீதமே இருந்தனர். தற்போது அது சுமார் 45% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரை க. பொ. த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து 200,000 க்கும் மேற்பட்டோர் பாடசாலைகளிலிருந்து வெளியேறுகின்றபோதிலும் சுமார் 25000 பேருக்கு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு கிட்டுகின்றது.

மீதமான இலடசக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு க. பொ.த (உ/த) வகுப்பில் தொழிநுட்பமும் ஒரு பாடமாக அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது. வெகு வேகமாக முன்னேறி வரும் விஞ்ஞான உலகில் தொழில்நுட்பத்தின் தேவை மிக அவசியமாக உள்ளதால் எமது எதிர்கால சந்ததிக்கான தொழில் வாய்ப்புக்கள் இதன்மூலம் உறுதி செய்யப்படுகின்றன.

கொழும்பு அல்லது மேல் மாகாணத்துக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் தற்போது கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கிராமங்களும் நகரங்களும் சம நிலையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களைப் போலவே கிராமப்புற மாணவர்களும் முன்னேற்றம் பெற வேண்டுமென்ற நோக்கில் கல்வி விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர்ப்புற பாடசாலையிலுள்ள வசதிகள் கிராமமட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் சிறந்த பாடசாலைகளைத் தேடி பெற்றோர் அலையும் அசெளகரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் மஹிந்தோதய விஞ்ஞான கூடம் உட்பட 5000 பாடசாலைகளை சகல வசதிகளைக் கொண்ட பாடசாலைகளாக முன்னேற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் அமைதி சமாதானம், சகல இன, மத மக்களும் ஐக்கியமாக வாழும் எவரும் எங்கும் சென்றுவரக் கூடிய சூழல் எதிர்கால சந்ததிக்கான சுபீட்சமான எதிர்காலம் இவையத்தனையும் சுதந்திரமான ஒரு நாட்டின் குறிப்பிடத்தக்க அடையாளங்களாகும். இதனால் இம்முறை கொண்டாடப்படும் நாட்டின் 66 வது சுதந்திர தினம் மிகுந்த அர்த்தம் பெறுகிறது.

வரலாற்றுப் பெருமை மிக்க இலங்கையின் தேசியக் கொடி

‘இலங்கையின் வரலாற்று ஆரம்பம் விஜய மன்னனுடனேயே ஆரம்பமாகின்றது என சரித்திர ஆய்வாளர் எச். எம். ஹேரத் தனது இலங்கையின் தேசியக் கொடியும் தேசிய கீதமும் என்னும் நூலில் கூறியுள்ளார். விஜய மன்னன் சிங்கத்தின் சின்னமுள்ள கொடியினை பயன்படுத்தியதாகவும் அவர் கூறுகின்றார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னன் (கி.பி. 1815 இல்) சிங்கக் கொடியை பயன்படுத்தியதாக இலங்கை சரித்திர நூல்கள் கூறுகின்றன.

இதே சிங்கக் கொடியை பிரித்தானிய அரசு அங்கீகரிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வொன்று 1815.03.02 இல் கண்டி கேட்போர் கூடத்தில் (திருமண மண்டபம்) ஒழுங்கு செய்யப்பட்டது.

இதில் பிரிட்டிஷ் இளவரசர் சார்பில் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநர் றொபர்ட் பிரவுன்றித் என்பவரும் இலங்கை மக்கள் சார்பில் அதிகார் திஸ்ஸவாஸ் மற்றும் கண்டிய முக்கியஸ்தர்களும் சமுகமளித்து சிங்கக் கொடி அங்கீகரிக்கப்பட்டது.

இதை அடுத்து பிரித்தானியத் துருப்பினரும் பாண்ட் வாத்தியக் குழுவினரும் பங்கேற்று கெளரவப்படுத்தினர். 1947 இல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கையின் சுதந்திரம் தொடர்பான கூட்டத்தில் சிங்கக் கொடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

1948 பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் முதலாவது சுதந்திரதின விழாவின் போது இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா சிங்கக் கொடியை ஏற்றிவைத்தார். மேலும் டி. எஸ். சேனநாயக்கா 1948 மார்ச் 16ம் திகதி தேசியக் கொடியை சகல இனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்குவதற்காக குழு ஒன்றை அமைத்தார்.

அக்குழுவின் தலைவராக அன்றைய சுகாதார, உள்ளூராட்சி அமைச்சர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கவும், செயலாளராக கலாநிதி செனரத் பரணவிதானவும் நியமிக்கப்பட்டனர். குழு உறுப்பினர்களாக ஜே. ஆர். ஜயவர்த்தன, ஜே. லலித் ராஜபக்ஷ, சேர். ஜோன்கொத்தலாவல. ஜீ. ஜீ. பொன்னம்பலம், ரீ. பீ. ஜாயா, எஸ். நடேசன் ஆகியோர் பங்குகொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி