ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

அமைச்சர் ஜீ. எல். அபுதாபியிலிருந்து டில்லி செல்ல ஏற்பாடு

அமைச்சர் ஜீ. எல். அபுதாபியிலிருந்து டில்லி செல்ல ஏற்பாடு

ஓரிரு தினங்களில் உயர்மட்ட சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லி செல்லவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தினை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதேநேரம் புது டில்லியிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்தும் அமைச்சர் விரிவாக விளக்கமளிக்கவுள்ளார்.

அபுதாபிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அங்கிருந்து புது டில்லிக்கு நேரடியாக விஜயம் செய்யவிருப்பதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இன்னும் ஓரிரு தினங்களில் அமைச்சர் சல்மான் குர்ஷித்தினை டில்லியில் இரண்டாவது தடவையாகவும் சந்திக்கவிருப்பதனை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா நேற்று உறுதிப்படுத்தினார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25வது அமர்வில் இலங்கை கலந்து கொள்ளவுள்ளமையை முன்னிட்டு மோதல்களுக்குப் பின்னர் துரித கதியில் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க இலங்கை அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.

அதற்கமைய ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அவற்றுள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள அம்சங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் செலலாளர் லலித் வீரதுங்க கடந்த வாரம் வொசிங்டன் பயணமானார்.

அதேவகையில் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ¤ம் புதுடில்லியிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொருளாதார இலக்கு, புனர்வாழ்வு, நல்லிணக்கச் செயற்பாடுகள் என்பன குறித்து விரிவாக விளக்கமளிபாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுக்கு முன்பாக அமைச்சர் பீரிஜும், ஜனாதிபதி செயலாளர் வீரதுங்கவும் உலக நாடுகளின் தூதுவர்களுக்கு இரு முனைகளில் விளக்கமளிக்கவென ஏற்கனவே ஏற்பாடுகளை முன்னெடுத்தி ருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி