ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

ஜெயலலிதாவின் கருத்துக்கள் எவ்வகையிலும் எடுபடாது

ஜெயலலிதாவின் கருத்துக்கள் எவ்வகையிலும் எடுபடாது

இலங்கைக்கும் இந்தியாவு க்குமிடையில் இராஜதந்திர ரீதியாக எந்தவிதமான பிரச்சி னையுமில்லையென வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் கூற்றுக்கள் முக்கியத்துவமானவையல்லவெனவும் பிரதியமைச்சர் நியோமல் கூறினார்.

கச்சதீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென தமிழக முதலமைச்சர் கூறியிருப்பதற்கு பதிலளிக்குமுகமாகவே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கச்சதீவை மீண்டும் இந்தியாவிற்கு சொந்தமாக்கி கொள்வதற்காக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்போது கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்றும் இந்தியாவுக்கு உரித்தானது இல்லையெனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதற்கிணங்க கச்சதீவுக்கருகில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டி ருப்பதாகவும் இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி