ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

பஸ் கட்டணக் கொள்கை மறுசீரமைப்பு; அரச நிறுவனங்களின் உதவியுடன் மதிப்பீடு

பஸ் கட்டணக் கொள்கை மறுசீரமைப்பு; அரச நிறுவனங்களின் உதவியுடன் மதிப்பீடு

தேசிய பஸ் கட்டணக் கொள்கையை மறுசீரமைப்பதற்காகப் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சகல அரச நிறுவனங்களின் ஒன்றிணைந்த மதிப்பீடொன்று நடத்தப்படும்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இதற்கான நவடிக்கையை மேற்கொண்டு ள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ரயில்வே திணைக்களம், போக்குவரத்துச் சபை, மேல் தென், வடமேல், வட மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மாகாண போக்குவரத்து அதிகார சபைகள் ஆகியவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளின் பங்களிப்போடு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படும். தேசிய பஸ் கட்டணக் கொள்கையை மறுசீரமைப்பதற்காக ஜனாதிபதி நியமித்த அமைச்சரவை உபகுழுவின் சிபார்சின் பேரில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

தற்போது அமுலிலுள்ள பஸ் கட்டணகொள்கை 2000 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

இது காலத்துக்கு ஏற்ப சீரமைக்கப்பட வேண்டும் என குழு தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டில் நூறு அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு ஆரம்ப கட்டத்தில் ஈடுபடும். இவர்களுக்கான அடிப்படை பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை நிபுணரான பேராசிரியர் சமன் பண்டார பயிற்சி செயலமர்வை நடத்தினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி