ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் சென்னையில் இன்று சந்திப்பு

இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் சென்னையில் இன்று சந்திப்பு

தேனாம்பேட்டையில் பேச்சுவார்த்தை ஆரம்பம்

* இலங்கை சார்பில் 16 பேர்கொண்ட குழு பங்கேற்பு

* இருதரப்பு உயர் அதிகாரிகளுக்கு பார்வையாளர் அந்தஸ்து

இலங்கை, இந்திய மீனவர்களிடையிலான பேச்சுவார்த்தை இன்று தமிழகத்தில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறவுள்ளது.

தேனாம்பேட்டை டி. எம். எஸ். வளாகத்தில் உள்ள மீன் வளத்துறை இயக் குநர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணிக்கு இருதரப்பு மீனவர்களி னதும் சந்திப்பு ஆரம்ப மாகும்.

இப்பேச்சுவார்த் தையில் கலந்துகொள்ள வென இலங்கையிலி ருந்து 16 பேர் கொண்ட குழு நேற்று இந்தியா பயண மானது.

மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அண்மையில் புதுடில்லி சென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் மத்திய விவசாய, மீன்பிடியமைச்சர் சரத் பவார் ஆகியோருடனான சந்திப்பினை யடுத்து இலங்கை, தமிழக மீனவர் பேச்சுவார்த் தையில் பங்கெடுக்கு மாறு இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்த அழைப்பினையேற்று அமைச்சர் ராஜித நேற்று இக்குழுவினை இந்தியா அனுப்பிவைத்தார்.

எல்லை தாண்டி மீன்பிடித்தலை தடை செய்யக் கோருவதே இச்சந்திப்பில் பங்கெடு ப்பதற்கான பிரதான காரணமென இதில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள் உறுதியாக தெரிவித் திருந்தனர்.

இலங்கையின் வட பகுதியில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மற்றும் அவர்கள் உபயோகிக்கும் இழுவைப் படகுகளினால் ஏற்படும் சேதம் அதனால் இலங்கை மீனவர்கள் படும் துயரம் ஆகியன குறித்து இச் சந்தர்ப்பத்தில் தமிழக பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்டப்படுமென இந்தியா சென்றுள்ள மன்னார் மீன்பிடிச் சங்கத் தலைவர் ஜஸ்டின் கூறினார்.

இலங்கை, இந்திய மீனவர் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக இலங்கை சார்பில் இலங்கை மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாரச்சி, மீன்பிடியமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் எஸ். சுபசிங்ஹ, மீன்பிடி திணைக்கள கண்காணிப்பு நடவடிக் கைகளுக்கான உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா, மன்னார் மீன்பிடி உதவிப் பணிப்பாளர் பி. எஸ். மிரெண்டா, அமைச்சின் ஆலோசகர் சதாசிவம் ஆகியோர் சென்றுள்ளனர்.

இவர்களுடன் மன்னார் மீன்பிடி சங்கத் தலைவர்களான ஜஸ்டின் சொய்ஸா, ஜேசுநாதன் சூசை, யாழ். மீன்பிடி சங்கத் தலைவர் பொன்னம்பலம், முல்லைத்தீவு தலைவர் ஜெனிபர், கிளிநொச்சியைச் சேர்ந்த பிரான்சிஸ், புத்தளத்தைச் சேர்ந்த கெமினஸ் பெரேரா, நீர்கொழும்பு சங்கத் தலைவர் மைக்கல் பெர்னாண்டோ, திருகோணமலையைச் சேர்ந்த செந்தில் நாதன் மற்றும் இந்திய இலங்கை மீன்பிடி ஆலோசகர் சபை உறுப்பினர் அந்தோனி முத்து ஆகியோரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்றனர். இதேவேளை, இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழகம், நாகபட்டினம், தஞ்சாவூர், புதுச்சேரி இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ள விருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் இப்பேச்சுவார்த்தையின் பார்வையாளரெனவும் இருதரப்பையும் சேர்ந்த உயரதிகாரிகள் பங்குபற்றவுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி