ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர்களுக்கிடையிலான விளையாட்டு

சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர்களுக்கிடையிலான விளையாட்டு

எலோ வின்னர்ஸ் இல்லம் வெற்றி

சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான இல்ல விளையாட்டுப் போட்டியில் எலோ வின்னர்ஸ் இல்லம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ. எல். எம். சலீம் தலைமையில் சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத்திட்ட திறந்தவெளியரங்கில் சனிக்கிழமை (5) இடம்பெற்ற மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இல்ல விளையாட்டுப் போட்டியில் 121 புள்ளிகளைப் பெற்று எலோ வின்னர்ஸ் இல்லம் (மஞ்சள்) முதலாம் இடத்தையும் 110 புள்ளிகளைப் பெற்று சாந்தம் ரெட் கிங் இல்லம் (சிவப்பு) இரண்டாம் இடத்தையும் 105 புள்ளிகளைப் பெற்று புளு அக்மீஸ் இல்லம் (நீலம்) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

சாய்ந்தமருது பிரதேச செயலக வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டி உத்தியோகஸ்தர்களுக்கிடையில் ஒற்றுமையையும், பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டதாக பிரதேச செயலாளர் ஏ. எல். எம். சலீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டி கரைவாகு வொலிவேரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் எலோ வின்னர்ஸ் இல்லம் 121 புள்ளிகளைப் பெற்று சாய்ந்தமருது பிரதேச செயலக சம்பியனானது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் வரவேற்கப்படுவதையும், சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட எலோ வின்னர்ஸ் இல்லத்தினர் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதனிட மிருந்து வெற்றிக் கிண்ணத்தைப் பெறுவதையும் அணியினரையும் படத்தில் காணலாம்.
(சாய்ந்தமருது தினகரன், மாளிகைக்காடு குறூப், கல்முனை குறூப்,
சென்றல்கேம்ப் குறூப் நிருபர்கள்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி