ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238

வடக்குத் தேர்தல் சிறந்த எதிர்காலத்துக்கான புதியதொரு ஆரம்பம்

நல்லிணக்கப்பாட்டுக்கு அனைத்து மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்

வெற்றிகரமாக நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தல் வட பகுதி மக்களின் சிறந்த எதிர்காலத்திற்கு புதிய ஆரம்பமாக அமையும் என்றும் விரைவில் அரசியல் தீர்வொன்றையும் தேசிய நல்லிணக்கப்பாட்டையும் யதார்த்தபூர்வமான அதிகார பகிர்வின் மூலம் ஏற்படுத்தி, இலங்கைத் தமிழ் சமூகம் உட்பட இந்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் நீதியான, கெளரவமான மதிப்புக்குரிய மற்றும் சுயகெளரவமான வாழ்க்கையை நடத்துவதற்கு இந்தியா உதவுமென்று தாம் நம்புவதாக இலங்கைக்கு நேற்றுக்காலை வருகைதந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மா குர்ஷித் தெரிவித்தார்.

விவரம்

பொத்துவிலில் மினி சூறாவளி

பொத்துவில் பிரதேசத்தில் மாலை வீசிய திடீர் சுழற்காற்றினால் மரங்கள், மின்கம்பங்கள் என்பன முறிந்து விழுந்ததுடன் வீடுகள், கடைகள் மற்றும் மருத்துவமனை யின் கூரைகள் ஆகியனவும் தூக்கி வீசப்பட்டன.


இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ். விஜயம்


ஜனாதிபதி சல்மான் குர்ஷிட் சந்திப்பு


ராணுவத்தின் 64 வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை


தெ.கி. பல்கலைக்கழக மோதல் சம்பவம் : 53 பேரில் 49 பேர் விடுதலை

தென்கிழக்குப் பல்கலைக்கழக (பிரயோக விஞ்ஞான பீட) மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலையடுத்து கைது செய்யப்பட்டி ருந்த 53 மாணவர்களில் 49 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


ரூ. ஒருகோடி பெறுமதி: இரண்டு பெரல் வெண் சந்தன எண்ணெய் கைப்பற்றப்பட்டது

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு பெரல் வெண் சந்தன எண்ணெய் அல்லது வல்லபட்டை எண்ணெய்யை சுங்க திணைக்களத்தினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

(2013-10-08 01:05 திணி)


இலங்கையிலிருந்து வல்லப்பட்டை கடத்தல் முயற்சி முறியடிப்பு

இரண்டு கம்போடிய பிரஜைகள் கைது

இலங்கையிலிருந்து 35 கிலோ வல்லப்பட்டையை பேங்கொக்குக்கு கடத்திச் செல்ல முற்பட்ட கம்போடிய பிரஜைகள்ங இருவர் இன்று அதிகாலை விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(2013-10-08 11:24 திணி)


இன்று லட்சுமி பூஜை

நவராத்திரி விரதத் தில் இன்று நாலா வது நாளாகும். இன்று செல்வத்தை வாரி வழங்கும் இலட்சுமி தேவிக்குரிய நாளாகும். இன்று ஆலயங்களிலும் இல்லங்களிலும் ஸ்ரீலட்சுமி தேவிக்கு விசேட பூஜைகள் நடத்தப்படும்.

அமைச்சர்கள் குர்ஷித் - ஜீ.எல். பீரிஸ்
கொழும்பில் கூட்டுச் செய்தியாளர் மாநாடு

 

 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமை ச்சர் சல்மான் குர்ஷித் நேற்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை வெளி விவகார அமைச்சில் சந்தித்தபோது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: துஷார பெர்னாண்டோ)

இந்த நாட்டில் கூடார யுகமொன்று உருவாக மக்கள் இடமளிக்கக் கூடாது

எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடரும் மொரட்டுவ சொய்சாபுர நிகழ்வில் ஜனாதிபதி

அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கு உகந்த நாடொன்றை உருவாக்கியுள்ளதாகவும் இனி இந்த நாட்டில் கூடார யுகமொன்றுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன் அரசாங்கம் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கையில் இத்தகைய அபிவிருத்திகளைத் தடை செய்வதற்கு சில சக்திகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு . . . .

விவரம்

 

வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட தயாசிறி ஜயசேகர நேற்றுக் காலை சுபநேரத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் தனது
கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட
போது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: வாரியபொல தினகரன்
நிருபர் - யு. எல். முஸம்மில்)

ஐ. தே. க. மாத்தறை மோதல் சம்பவம்

கைதான மங்களவின் ஆதரவாளர்கள் 24 பேருக்கும் 14 வரை விளக்கமறியல்

அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதிமன்று உத்தரவு

மாத்தறையில் நடந்த மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் 24 பேர் உட்பட 25 பேரையும் 14ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாத்தறை பிரதம மஜிஸ்திரேட் ருவன் சிசிர குமார உத்தர விட்டார். மோதலில் காயம டைந்திருந்தவர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்ப டவில்லை. இது தொடர்பில் அடுத்த வழக்கு தினத்தன்று அடையாள அணிவகுப்பு நடத்துமாறும் மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

விவரம்


 

வட மாகாண முதலமைச்சராக சீ. வி. விக்னேஸ்வரன் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது பிடிக்கப்பட்ட படம் மத்தியில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியும் காணப்படுகிறார். (படம்: சுதத் சில்வா)







விரிவுரைகள், ஒப்படைகள் மற்றும் பரீட்சைகளுக்கு மாணவரை மட்டுப்படுத்துகின்ற தற்போதைய முறைக்குப் பதிலாக சுதந்திரமான சிந்தனைக்கும், விரிவான உரையாடலுக்கும் ரசனைக்கும் வாய்ப்பேற்படுத்துகின்ற கல்வி முறையொன்றை உருவாக்குதல் அத்தியாவசியமாகும் என நான் நம்புகிறேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ