ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

சீன பகிரங்க டென்னிஸ் ஜோகோவிச், செரீனா சம்பியன்

சீன பகிரங்க டென்னிஸ் ஜோகோவிச், செரீனா சம்பியன்

சீன பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த இறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6 – 3, 6 – 4 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ரபெல் நடாலுக்கு அதிர்ச்சி அளித்து 4 வது முறையாக இந்த கோப்பையை சொந்தமாக்கினார். ஜோகோவிச்சிடம் தோற்றாலும் அவரிடம் இருந்து முதல் இடத்தை நடால் தட்டிப்பறித்தது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் பிரிவில் உலகின் முதனிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6 – 2, 6 – 2 என்ற நேர் செட்டில் செர்பியாவின் ஜான்கோவிச்சை பந்தாடி கோப்பையை வசப்படுத்தினார். இந்த ஆண்டில் செரீனாவின் 10 வது பட்டம் இதுவாகும். இந்த சீசனில் அவர் 73 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருப்பது நினைவு கூரத்தக்கது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா) - காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி 6 – 2, 6 – 2 என்ற நேர் செட்டில் துஷிவினா (ரஷ்யா) - அரஞ்சா பாரா (ஸ்பெயின்) இணையை எளிதில் தோற்கடித்து சம்பியன் பட்ட்தை தட்டிச் சென்றது. இந்த சீசனில் சானியாவுக்கு கிடைத்த 5 வது இரட்டையர் பட்டம் இதுவாகும். வெற்றி குறித்து சானியா மிர்சா கூறுகையில் :- ‘ஆட்டத்தின் எல்லா துறைகளிலும் நான் முன்னேற்றம் கண்டு இருக்கிறேள். உடல் தகுதியிலும் நன்றாக உள்ளேன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதைவிட இப்போது சிறந்த வீராங்கனையாக உருவெடுத்து இருக்கிறேன்’ என்றார்.

இதபோல் டோக்கியோவில் நடந்த ஜப்பான் பிகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா (இந்தியா) – ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஜோடி சமபியன் பட்டத்தை கைப்பற்றியது. அவர்கள் இறுதிப் போட்டியில் 7 – 6 (7 – 5), 6 – 4 என்ற நேர் செட்டில் ஜாமி முர்ரே (இங்கிலாந்து) – ஜான் பீர்ஸ் (அவுஸ்திரேலியா) ஜோடியை சாய்த்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி