ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

அநுராதபுரத்தில் பாசிப்பயறு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்

அநுராதபுரத்தில் பாசிப்பயறு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்

அநுராதபுர மாவட்டத்தில் பாசிப்பயறு உற்பத்தியை ஊக்குவிக்க விவசாயத் திணைக்களம் பல ஆக்கபூர்வமான செயற்திட்டத்தினை முன் வைத்துள்ளது. மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் காணிகளில் பாசிப்பயறு நடுவதற்குத் திட்டமிட்டுள்ள மாவட்ட விவசாயத் திணைக்களம் முதலில் விதை உற்பத்தியை ஆரம்பிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

பாசிப்பயறுச் செய்கையில் ஈடுபடவுள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் முதலில் சுமார் ஆயிரம் ஏக்கர் காணியில் பாசிப் பயறு விதை உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளனர்.

மாவட்டத்தில் நொச்சியாகம ராஜாங்கன, நுவரவெவ பிரதேசம் ஆகிய பகுதிகளிலேயே பாசிப்பயறு விதை உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அநுராதபுர மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி