ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 24
விஜய வருடம் புரட்டாசி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY,OCTOBER ,01, 2013
வரு. 81 இல. 233
 

இயல்பு அறிந்து நடப்பேன்

இயல்பு அறிந்து நடப்பேன்

ஓர் ஆட்டின் மீது காக்கை ஒன்று அமர்ந்தது. “ஆடே! சிறிது தூரம் முன்னால் செல்” என்றது. ஆடும் அப்படியே செய்தது.

“ஆடே சிறிது தூரம் பின்னால் செல்’ என்றது. ஆடம் பின்னால் சென்றது.

“அந்தப் பக்கம் செல். இந்தப் பக்கம் செல்” என்று ஆட்டிடம் பலமுறை சொன்னது காக்கை. அது சொன்னபடியே ஆடும் கேட்டது. இதனால் நிறைவு அடையாத காக்கை, ‘ஆடே! இன்னும் சிறிது தூரம் முன்னால் போ” என்றது.

கடுப்படைந்த ஆடு, “ஏ காக்கையே! என்னிடம் நீ நடந்து கொண்டதைப் போல ஓர் நாயிடம் நடந்து கொள்வாயா? அப்படி நடந்தால் அது உன்னைக் கடித்துக் குதறி இருக்காதா?” என்று கோபத்துடன் கேட்டது.

அதற்குக் காக்கை, ஆடே! நான் கோழைகளை வெறுக்கிறேன். என் விருப்பம் போல அவர்களை ஆட்டி வைக்கிறேன். வீரம் உள்ளவர்களிடம் நான் பணிந்து போகிறேன். யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் சொல்கின்றபடி நட” என்றது.

அதைச் சுமந்தபடி அங்கிருந்து நடந்தது ஆடு.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி