ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 24
விஜய வருடம் புரட்டாசி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY,OCTOBER ,01, 2013
வரு. 81 இல. 233

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி அதிபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு

பூட்டிய குளியலறைக்குள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்

கொலையா தற்கொலையா ?

பொலிஸ் தீவிர விசாரணை

நீர்கொழும்பு, சென். மேரிஸ் கல்லூரி அதிபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்டெடு க்கப்பட்டுள்ளார். கல்லூரி வளாகத்தில் நேற்றுக் காலை 7.30 - 7.50 மணிக்கு இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிபரின் காரியாலயத்திற்கு அருகிலுள்ள குளியலறை யிலிருந்து இவர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.இந்தச் சம்பவம் நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்றுக் காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீர்கொழும்பு பிரதேசத்தி லுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான சென் மேரிஸ் கல்லூரியின் அதிபரான நீர்கொழும்பு, தளுபொத பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய மெக்சல் டொனால்ட் பெர்னாண்டோ என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விவரம்

பகிடிவதைகள் என்ற பெயரில் நடைபெறுகின்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை முழுமையாகவே பல்கலைக்கழகத்திலிருந்து ஒழிப்பேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பதவிகளைவிட மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் பேர்ட்டி

ஜனாதிபதி அனுதாபம்

அரசியலில் உயர் பதவிகளை விட தமது மக்களின் சுக துக்கங்களில் அக்கறை கொண்டு செயற்பட்ட மக்கள் தலைவனாக வாழ்ந்த பேர்டி பிரேமலால் திசாநாயக்கவின் மறைவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் பேரிழப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விவரம்

வட மாகாண ஆளுநருடன் விக்னேஸ்வரன், சுமந்திரன் சந்திப்பு

இருதரப்பும் சுமுக பேச்சுவார்த்தை

வட மாகாண சபையின் முதல மைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ருக்கும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறிக்கும் இடையில் நேற்று முதற்தடவையாக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ்ப் பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றுக் காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளன.

விவரம்

புலமைப்பரிசில் பெறுபேறு இன்று இணையத்தில் வெளியாகும்

வருடாந்தம் சிறுவர் தினத்தில் வெளியிட கல்வி அமைச்சர் தீர்மானம்

இவ்வருடம் முதல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் உலக சிறுவர் தினத்தன்று வெளியிட்டு வைக்கப்படுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும். 2013ஆம் ஆண்டு தொடக்கம் வருடந்தோறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அன்றைய தினத்தில் வெளியிடுமாறும் அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விவரம்

ஊழல் வழக்கில் பீஹார் முன்னாள் முதல்வர் குற்றவாளி

பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்டீரிய ஜனதா தள தலைவ ருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. லாலு பிரசாத்துடன் வழக்கில் சேர்க்கப்பட்ட45 பேரும் குற்றவாளியே என்றும் ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1990ம் ஆண்டு பீகார் முதல்வராக இருந்தபோது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிக்கியிருந்தார். மாட்டுத்தீவனத்திற்காக 37.7 கோடி ஊழல் என கருவூலத்தில் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டது.

விவரம்


 

இன்று சர்வதேச சிறுவர், முதியோர் தினம்

 

 

சர்வதேச சிறுவர், முதியோர் தினக் கொண்டாட்ட
நிகழ் வுகள் இன்று நாடு முழுவதும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விவரம்