ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 24
விஜய வருடம் புரட்டாசி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY,OCTOBER ,01, 2013
வரு. 81 இல. 233

பாதுகாப்புக்கு நாடெங்கிலும் இராணுவம் இருப்பது அவசியம்

பாதுகாப்புக்கு நாடெங்கிலும் இராணுவம் இருப்பது அவசியம்

கடந்த ஐந்தாண்டு காலத்தில் 19 தேர்தல்களை வெற்றி கரமான முறையில் நடத்தி முடித்த எனது அரசாங் கத்தைப் பார்த்து நவநீதம்பிள்ளை நாம் அதிக சர்வா திகாரப் போக்கில் சென்று கொண்டிருக்கிறோம் என்று உண்மை க்கு மாறான ஓர் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு, மீண்டும் எங்கள் நாட்டுக்கு இடையூறு செய்கிறார் என்று ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அல்ஜெkறா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென்று சீ.வி.விக்னேஸ்வரன் விடுக்கும் கோரிக்கையை நாம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரி வித்துள்ள ஜனாதிபதி, இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் இணங்கினால் ஏனைய மாகாணசபைகளும் இதே கோரிக் கையை விடுத்தால், நாட்டின் பாதுகாப்பிற்கான இராணுவத்தை அரசாங்கம் எங்குதான் வைத்திருக்க முடியும். அதற்கான வசதிகளை எவராவது எமக்கு செய்து கொடுப்பார்களா என்று அல்ஜெkறாவில் பேட்டி கண்டவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிரான தனது அறிக்கையை முழுமையாக தயாரித்து முடித்த பின்னரே இங்கு வந்து உண்மை நிலைவரத்தை ஆராய்ந்ததாக கூறுகிறார். இந்தக் கூற்றை நாம் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

நவநீதம்பிள்ளையை இலங்கையில் சிலர் ஒரு பெண் புலி என்று அவமதிக்கக்கூடிய வகையில் கூறியிருக்கிறார்களே. இதைப் பற்றி என்ன விளக்கத்தை நீங்கள் அளிப்பீர்கள் என்று இப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்நாட்டு மக்கள் தாங்கள் விரும்பும் கருத்தை தெரிவிப்பதற்கான பூரண உரிமையை கொண்டுள்ளார்கள். மக்களின் இந்த ஜனநாயக உரிமையை அரசாங்கத்தால் தடை செய்ய முடியாது என்று கூறினார்.

எனது அமைச்சரவையில் பலதரப்பட்ட அரசியல், மத பின்ன ணியைக் கொண்ட 58 பேர் இருக்கிறார்கள். நாம் இவர்கள் அனைவரையும் நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளோம். எனவே, தனிப்பட்ட முறையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது உத்தியோகத்தர்கள் எவரைப் பற்றியும் விமர்சிக்கும் அல்லது குற்றம் காணும் உரிமையைப் பெற்று ள்ளார்கள் என்றும் அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் ஜனாதிபதி கூறினார்.

எனது கட்சி வட மாகாணசபைத் தேர்தலில் தோல்வியடையும் என்பதை நான் முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தலைவரிடமும் நாம் வட மாகாணசபைத் தேர்தலை நடத்தப் போகிறோம் என்றும் இதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றும் எமது கட்சியின் மக்கள் ஆதரவை இந்தப் போட்டியின் போது வலியுறுத்தினேன் என்று ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டுமென்று அறிவித்திருந்தது. ஓர் அரசாங்கத்தைப் பற்றியோ, ஒரு நிர்வாகத்தைப் பற்றியோ குற்றம் குறை காண்பது இலகுவான விடயம். ஆனால், ஒரு நிர்வாகத்தை சீராக நடத்தி முடிப்பது கஷ்டமான விடயம். அதனால் தான் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வட மாகாண சபையின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்று அதனை சரியாக செய்து காட்டுங்கள் என்ற சவாலை விடுக்கிறோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அயல்நாடான இந்தியாவுடன் நாம் நெருங்கிய நட்புறவை வைத்திருக்கிறோம். இந்தியாவுக்கு வேறு விதமான அரசியல் பிரச்சினைகள் இருப்பதனால் இந்தியாவின் சில செயற் பாடுகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்தியா ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் எங்கள் நாட்டுக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களித்தது. இந்தியாவில் எழுந்துள்ள உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதென்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். இந்தியாவுடனான எங்கள் நட்புறவு தொடரும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சில இராஜதந்திரிகள் தன்னிடம் வட மாகாண சபைத் தேர்தல் பற்றி கேட்ட போது, நான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டுமென்று கூறிய போதிலும், எனது இந்த எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது. நாம் அங்கு 7 ஆசனங்களையே வெற்றி பெற்றோம் என்றும் ஜனாதிபதி இந்த தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.

சில நாடுகள் உலகத்தின் பொலிஸ்காரர்களை போன்று மற்ற நாடுகளை துன்புறுத்துகின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி, உலகத்திற்கு பொலிஸ்காரர்கள் அவசியமில்லை. உலகத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் அமைப்பு தன்னகத்தே கொண்டுள்ளது என்றும் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி