ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 24
விஜய வருடம் புரட்டாசி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY,OCTOBER ,01, 2013
வரு. 81 இல. 233
 

வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய

வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய

சில குறிப்புகள்...

நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிய வேண்டுமானால், உங்கள் திறமையை மற்றங்கள் எளிதில் புரிந்துகொள்ள வேண்டுமானால்....

* முதலில் உங்களை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

* எதையும் நீங்களே முடிவு செய்யுங்கள்.

* கெட்டவர்களோடு நெருங்கிப் பழகுங்கள். அவர்களின் தவறை மீண்டும் மீண்டும் எடுத்து சொல்லுங்கள்.

* ஒரே செய்தியை அல்லது கருத்தை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். (இதற்கு உங்களுக்கு அதிக காலங்கள் தேவைப்படலாம்.)

* எல்லாம் தெரியும் என்று அலட்டிக் கொள்ளாதீர்கள்.

* மற்றவர்கள் திறமையின்மூலம் பிரபலம் அடைய முயற்சிக்காதீர்கள்.

* புரணி பேசாதீர்கள்

* ஜாடை பேசாதீர்கள்

* நீங்கள் சொல்ல நினைப்பதை நீங்களே நேரடியாக சொல்லுங்கள். யாருக்கு சொல்ல வேண்டுமோ அவரிடமே சொல்லுங்கள். குறிப்பால் உணர்த்துங்கள். ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பொங்கி எழுங்கள்.

* சபைகளில் பேசத் தயங்காதீர்கள். (இதற்கு உங்களுக்கு அதிக காலங்கள் தேவைப்படலாம்.)

* பிறரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாதீர்கள்.

* பிறப்பின் தரத்திற்கு ஒவ்வாத செயல்களை செய்யாதீர்கள்.

* மற்றவர்களின் கருத்துக்கள், செய்திகளை கையாளும்போது செய்தியில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

* மரியாதை செலுத்தியவர்களை மறந்துவிடாதீர்கள்.

* ஒருவரைப் பற்றி சந்தேகம் இருந்தால் முதலில் சம்மந்தப்பட்டவரிடம் பேசுங்கள்.

* எளிதில் பழகும் யாரையும் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.

* பிறரது திறமையை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.

* உங்களோடு பழகியவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்தால் ஏன் இப்படி நடந்துகொள்கிaர்கள்? என்று சம்பந்தப்பட்டவரிடம் காரணம் கேட்பதை பழகிக் கொள்ளுங்கள்.

* தவறுகளை ஒத்துக்கொள்ளவும், திருத்திக்கொள்ளவும் பழகிக்கொள்ளுங்கள்.

* எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களை அவமானப்படுத்தி உங்களை உயர்த்த முயற்சிக்காதீர்கள்.

* பள்ளிக்கூடம், பத்திரிகை, இணையதளங்களை முறைகேடாகப் பயன்படுத்தாதீர்கள்.

* அதிகாரத்தால் கூட யாரையும் அடக்க முயற்சி செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் பிறரை அவமானப்படுத்தி அடக்க முயற்சிக்காதீர்கள். இதற்கு சிலர் அடங்க மாட்டார்கள்.

* எதையும் பகிரங்கப்படுத்துவதற்கு முன்னால் ஆராயக் கற்றுக்கொள்ளுங்கள்.

இனிமேல் உங்கள் காலம் தான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி