ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

அல்பேனியாவின் புதிய அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றது

அல்பேனியாவின் புதிய அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றது

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் கடந்த ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட சோஷலிச தலைமையிலான இடதுசாரி கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது.

முன்னாள் பிரதமர் சாலி பெரிஷாவின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டமும், ஊழலும் நிறைந்திருந்தன. வெற்றிபெற்ற சோஷலிசக் கட்சி எடி ராமாவைப் பிரதமராக தேர்ந்தெடுத்து 20 பேர் கொண்ட அமைச்சர் குழுவையும் தேர்ந்தெடுத்தது.

நேற்று முன்தினம் ஞாயிறன்று நடந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் இந்த அமைச்சரவை 82 – 55 என்ற அளவில் வாக்குகளைப் பெற்று அம்மன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது. பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடி ராமா (49) 3,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் ஏழ்மையை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி