ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

மக்கள் போராட்டம் எதிரொலி: ஜப்பானின் கடைசி அணு உலையும் மூடப்பட்டது

மக்கள் போராட்டம் எதிரொலி: ஜப்பானின் கடைசி அணு உலையும் மூடப்பட்டது

ஜப்பானில் பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக அந்நாட்டின் கடைசி அணுஉலையும் மூடப்பட்டு விட்டது. உலக பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக ஜப்பான் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக கடற்கரை ஓரம் அமைந்துள்ள பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்ததால் அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணு உலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது.

அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அணுமின் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட பியூகுஷிமா அணுமின் நிலையத்தை மூடிவிட்டது. ஜப்பானின் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் அணுமின் உற்பத்தி முற்றிலுமாக நின்று போனது இதுவே முதல் முறையாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி