ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் யாமீனுக்கு ஜனாதிபதி வாஹீத் ஆதரவு

மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் யாமீனுக்கு ஜனாதிபதி வாஹீத் ஆதரவு

மாலைதீவில் நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி முகம்மது வாஹீத், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூமின் சகோதரரை இறுதிக் கட்டத் தேர்தலில் ஆதரிக்க முடிவு செய்துள்ளார்.

மாலைதீவில் இம்மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி முகமது வாஹீத் வெறும் 5.13 சதவீதம் பெற்று படுதோல்வியடைந்தார். 45 சதவீத வாக்குகளைப் பெற்று முகமது நiத் முதலிடத்தையும், 25 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னாள் அதிபர் கையூமின் சகோதரர் அப்துல்லா யாமீன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

எனினும் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாததால் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த நiத் மற்றும் யாமீன் இடையே இறுதிக் கட்டத் தேர்தல் வரும் 28 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை ஜனாதிபதி முகமது வாஹீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறுதிக்கட்ட வாக்குப் பதிவின் போது சென்ற தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அப்துல்லா யாமீனுக்கு எனது ஆதரவை அளிக்கவிருக்கிறேன்.

ஏனென்றால் சட்டத்தை மதிக்காமல் தீவைப்பது இன மோதல்களை ஏற்படுத்துவது போன்ற செயல்களால் இந்நாட்டின் அரசியலமைப்பு பலவீனமாக்கப்படுவது சரியான வழியாக எனக்குத் தோன்றவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

2008 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நiத் வெற்றி பெற்றதும், நான்கு ஆண்டு கால ஆட்சிக்குப் பின் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி