ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு இன்று கோலாகல வரவேற்பு

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு இன்று கோலாகல வரவேற்பு

* நகரெங்கும் தோரணங்கள்; தேசியக் கொடிகளால் அலங்கரிப்பு

* நிறைகுடம் வைத்து தமிழ் கலாசாரத்துடன் அழைத்துவர ஏற்பாடு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு நாள் விஜயமாக இன்று யாழ். குடாநாட்டுக்கு செல்கிறார்.

ஆஸ்பத்திரி புதிய கட்டடம்

யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ். மாவட்ட மக்களின் நலன்கருதி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ். குடாநாடு எங்கும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டும், பனர்கள், கட்டவுட்கள் தொங்கவிடப்பட்டும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை யாழ். மக்கள் அன்புடன் வருக வருகவென வரவேற்கின்றோம் என்று மும்மொழிகளிலும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் பனர்கள் வீதிகள் எங்கும் தொங்கவிடப்பட்டுள்ளன.

அத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி கும்பம், மகர தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம் சென்றடையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அங்கு பெரு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

முதலாவதாக சுன்னாகம் பிரதேசத்திற்கு செல்லும் அவர் 3500 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். இதன் மூலம் 24 மெகாவோட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டு இன்று முதல் யாழ். குடாநாட்டு மக்களுக்கு விநியோ கிக்கப்படவுள்ளதுடன் குடாநாடு முழுவதும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.

யாழ். ரில்கோ ஹோட்டலில் நடைபெற வுள்ள இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ உட்பட கொழும்பிலிருந்து சென்றுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப் படைகளின் உயர் அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள வுள்ளனர்.

யாழ். மாவட்ட மக்களின் நலன் கருதி பாரிய நிதி ஒதுக்கீட்டில் அரசாங்கத் தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேலும் துரிதப்படுத்தும் திட்டங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நயினை நாகபூசணி அம்பாள் கோயிலுக்கும், நாக விகாரைக்கும் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதுடன் நாக விகாரை பிரதேசத்தில் சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் கடற்படையினரால் நிர்மாணம் செய்யப்பட்ட முகப்பு மற்றும் இறங்கு துறையையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.

நாளை

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள நிகழ்வுகளிலும் பங்குகொள்ளும் ஜனாதிபதி அவர்கள் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா செல வில் யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட வைத்தியசாலை கட்டடத் தொகுதியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.

ஜெய்கா நிறுவனத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நான்கு மாடிக் கட்டடத்தில் அதி நவீன வசதி களைக் கொண்ட 10 சத்திரசிகிச்சை பிரிவுகள், 22 படுக்கைகளைக் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு, கதிர் சிகிச்சை பிரிவு மற்றும் நவீன மருத்துவ இயந்திரங்களைக் கொண்ட ஆய்வுக் கூடமும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.

நாளை முதல் யாழ். மாவட்ட மக்க ளுக்கு முழுமையான சுகாதார வசதிகளை யும் பெற்றுக்கொள்ள முடியும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி