ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
அடுத்து வரும் சில தினங்களுக்கு கிழக்கில் காற்றுடன் மழை

வளிமண்டலத்தில் குழப்ப நிலை:

அடுத்து வரும் சில தினங்களுக்கு கிழக்கில் காற்றுடன் மழை

அடுத்து வரும் சில தின ங்களுக்கு கிழக்கு மாகா ணத்தில் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய கடும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறி வுறுத்தியுள்ளது.

நிலவிவரும் வடக்கு, கிழக்கு பருவப் பெயர்ச்சிக்கு மேலதிகமாக வளிமண்டலத்தின் கிழக்கே ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை காரணமாகவே கிழக்கே இந்த சீரற்ற காலநிலை நிலவுவதாக நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரி வித்தார்.

நேற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கடும் மழை பெய்தது. கிழக்கைப் போன்றே வடக்கு, வட மத்தி, ஊவா மாகாணங்களிலும் ஹம் பாந்தோட்டை மாவட்டத்திலும் இதே காலநிலை நிலவுமெனவும் இவ்வதிகாரி கூறினார். மழையுடன் வீசப்படும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதி கரிக்க கூடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு கரை யோரங்களிலும் இன்று மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று வடக்கிலிருந்து கிழக்கு திசையினூடாக மணித் தியாலத்திற்கு 20 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசம். இதன் வேகம் மன்னார் வளைகுடா மற்றும் மேற்கு, தெற்கு, தென்கிழக்கு கடலில் மணித்தி யாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடுமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

மன்னார் வளைகுடா, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு கரையோரங் களில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் என்பதனால் கடற்றொழி லாளர்கள், அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி