ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
போக்குவரத்து அனுமதி பத்திரத்தை தவறாக பயன்படுத்தும் வாகன உரிமையாளருக்கு தண்டனை

போக்குவரத்து அனுமதி பத்திரத்தை தவறாக பயன்படுத்தும் வாகன உரிமையாளருக்கு தண்டனை

அனுமதிப் பத்திரம் அனைத்தும் ரத்தாகும்

தேசியபோ.வ. ஆணைக்குழு

சட்டபூர்வமாக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த வழங்கப்பட்ட பஸ் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி வேறு பஸ்களை சட்டவிரோதமாக சேவையில் ஈடுபடுத்தும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத் தகைய பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பஸ் அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்படுமென அதிகார சபைத் தலைவர் ரொசான் குணவர்தன கூறினார்.

தூர சேவையில் ஈடுபடும் பஸ்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கூட்டம் தனியார் போக்குவரத்து அமைச் சர் சி.பி. ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

யாழ். கொழும்பு பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை யாழ் பஸ் தரிப்பிடம் என்பவற்றில் முறையற்ற விதத்தில் ஆசனம் ஒதுக்கப்படுவது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

இங்கு தேசிய போக்கு வரத்து அதிகார சபை அதிகாரிகளை ஈடுபடுத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்து வது தொடர்பில் புதிய நடைமுறை ஒன்றை அமுல்படுத்தவும் அதிவேக நெடுஞ்சாலை களில் ஈடுபடுத்த தனியான பஸ் தொகுதி யொன்றை ஏற்படுத்தவும் முடிவு செய் யப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களை அகற்றும் வரை மாதாந்த கேள்விமனு அடிப்படையில் பஸ் உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கவும் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி