ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

பொது ஆஸ்பத்திரிக்கு கொமர்'ல் வங்கியால் அத்தியாவசிய உபகரணங்கள் அன்பளிப்பு

மாத்தறை மாவட்டம்

பொது ஆஸ்பத்திரிக்கு கொமர்'ல் வங்கியால் அத்தியாவசிய உபகரணங்கள் அன்பளிப்பு

கொமர்ஷல் வங்கியின் பன்முகத் தன்மை கொண்ட கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக் கொண்ட ஆஸ்பத்திரிகளின் வரிசையில் அண்மையில் மாத்தறை மாவட்ட பொது ஆஸ்பத்திரியும் இணைந்துகொண்டது.

கொமர்ஷல் வங்கியின் சந்தைப் படுத்தல் பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க (இடமிருந்து இரண்டாவது) மாத்தறை மாவட்ட ஆஸ்பத்திரிப் பணிப்பாளர் டொக்டர் ணி. தி. ஷி. வி. சமரக்கோனிடம் அள்பளிப்பைக் கையளிக்கின்றார். கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியந்தி பெரேரா, ஆஸ்பத்திரி நிபுணத்துவ வைத்தியர் விமலசிறி உலுவத்தகே, தாதி அதிகாரி அஷோக் குமார மற்றும் மேட்ரன் தி. மி. ஷி. குணசேகர ஆகியோரைப் படத்தில் காணலாம்.

இந்த ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் கண்காணிப்புக் கருவியொன்று வழங்கப்பட்டது. மேலும் Oulse Oxymeter¸ இன்னொரு நோயாளிகள் கண்காணிப்புக் கருவி, சிறின்ஜ் பம்புகள் என்பனவற்றை வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியின் அவசரத் தேவைகளைக் கருத்திற் கொண்டே இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.

கொமர்ஷல் வங்கியின் மாத்தறைக் கிளையின் 40 வது வருட நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த உதவித் திட்டம் அமுல் செய்யப்படுகின்றது. 1973 ஜனவரி 24 இல் இந்தக் கிளை வங்கியின் ஏழாவது கிளையாகத் திறந்து வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 227 சேவை நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த உதவிகளுக்கான நிதிகள் வங்கியின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளன.

2012 டிசெம்பரில் கொமர்ஷல் வங்கி கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் ஆஸ்பத்திரி, எல்பிட்டிய தள வைத்தியசாலை, கம்பஹா மாவட்ட ஆஸ்பத்திரி, மற்றும் தம்பதெனிய தள வைத்தியசாலை என்பனவற்றுக்கு அத்தியாவசிய உபகரணங்களை வழங்கியது.

கொமர்ஷல் வங்கி இதற்கு முன்னர் லேடி றிட்ஜ்வே சிறுவர் ஆஸ்பத்திரி, மற்றும் யாழ்ப்பாண போதனா ஆஸ்பத்திரி, என்பனவற்றுக்கு மிக அத்தியாவசியமான நோயாளர் பராமரிப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது. மேலும் பல ஆஸ்பத்திரிகளுக்கு அவற்றின் வார்ட்டுகளைத் திருத்தி அமைப்பதற்காக கணிசமான நிதி உதவிகளையும் வழங்கியுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் தனிச்சிறப்பு மிகக் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டமானது தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கும் நிலையங்களுக்கும், சகல வசதிகளும் கொண்ட கம்பியூட்டர் ஆய்வு கூடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் 30000 த்துக்கும் மேற்பட்டவர்கள் நன்மை அடைந்துள்ளனர். இதற்கு மேலதிகமாக வங்கி வருடாந்தம் 25 பட்டதாரி மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களையும் மடிக் கணனிகளையும் வழங்குகின்றது.

2012 செப்டெம்பரில் நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவை ஊட்டும் வகையில் ஆங்கில கல்வித் திட்டம் ஒன்றை நாடளாவிய ரீதியில் தொடங்கியதன் மூலம் நாட்டின் கல்வித் துறையில் அதன் சேவையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கி கொமர்ஷல் வங்கியேயாகும். 227 கணனித் தொடர்புடைய கிளைகளையும் சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது.

566 திஹிணி இயந்திரங்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய திஹிணி வலையமைப்பையும் கொண்டுள்ளது. கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து இலங்கையின் தலைசிறந்த வங்கியாக ‘குளோபல் பினான்ஸ்’ சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ‘த பேங்கர்’, ‘பினான்ஸ் ஏஸியா’, ‘யூரோமணி’ மற்றும் ‘டிரெட் பினான்ஸ்’ சஞ்சிகைகளால் சிறந்த வங்கிக்கான பல விருதுகளையும் வென்றுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி