ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

SLAS விருது வழங்கும் விழாவில் வெற்றிபெற்ற சியெட் மோட்டார் ஓட்ட சாம்பியன்கள்

SLAS விருது வழங்கும் விழாவில் வெற்றிபெற்ற சியெட் மோட்டார் ஓட்ட சாம்பியன்கள்

,லங்கை மோட்டார் விளையாட்டுக் கழக ( SLAS) வருடாந்த விருது வழங்கும் விழாவில் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் மோட்டார் ஓட்ட வீரர்களான இர்பான் புஆர்ட் மற்றும் சுசன்த குணவர்தன ஆகியோர் விஷேட விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். சியெட் ரேடியல் டயர் பாவனையாளர்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்ட மோட்டார் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் ஈட்டிய வெற்றிகளுக்காகவே அவர்களுக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டது.

SLAS ஆல் 2012ல் நடத்தப்பட்ட 10 ‘வன்மேக்’ போட்டிப் பிரிவுகளில்ஷிழினி போர்ட் லாசர்/மஸ்டா 1500ணீணீ மற்றும்ஷிழினி போர்ட் லாசர்/மஸ்டா 1300ணீணீ ஆகிய பிரிவுகளில் இந்த இருவரும் சாம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்தப் பந்தயக் கார் ஓட்ட பருவ காலத்தின் இறுதியில் இவர்கள் இருவரும் தலா 30 புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.

நான்கு சமாந்தர தரை போட்டிகளிலும், மூன்று மேட்டு நில ஓட்டப் போட்டிகளிலும், மூன்று வீதி ஓட்டப் பேட்டிகளிலும இவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தப் போட்டிகள் எல்லாவற்றிலும் சியெட் டயர்களே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை ஷிழினி போர்ட் லாசர்/மஸ்டா 1300ணீணீ மற்றும் ஷிழினிபோர்ட் லாசர்/மஸ்டா 1600ணீணீஆகிய பிரிவுகளில் சரளைக் கல் வீதி போட்டியில் சியெட் அனுசரணை பெற்ற சாம்பியன் சாரதி உபுல்வன் சேரசிங்கவும், இந்த விழாவில் இரண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.

பொரலஸ்கமுவவில் உள்ள கோல்டன் ரோஸ் போல்ரூம் மண்டபத்தில் 2013 ஜனவரி 31ல் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவன விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு உப தலைவர் ரவி தத்லானி இந்த சியெட் சாம்பியன்களுக்கான விருதுகளை வழங்கி வைத்தார்.

SLAS உடன் நாம் எமது பங்குடைமையைத் தொடங்குகின்றபோதே சியெட் டயர்கள் இலங்கையின் வீதிகளில் கார்களுக்கும் ஏனைய வர்த்தக வாகனங்களுக்குமான பிரிவுகளில் சந்தையை கைப்பற்றிய நிலையில் தான் காணப்பட்டது” என்று கூறினார் தத்லானி. “இப்போது எமது புதிய விருத்தி செய்யப்பட்ட ரேடியல்கள் நாட்டின் பந்தயத் தளங்களிலும் அதன் ஆற்றலை நிரூபித்துள்ளன.

SLAS இன்று இந்த நிகழ்வில் சியெட் பந்தய வீரர்களை கெளரவிப்பதில் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றது” என்று அவர் மேலும் கூறினார்.

SLAS வன்மேக் பந்தயத்தில் பங்கேற்ற பெருமளவான சாரதிகளுக்கு சியெட் ரேடியல் டயர்கள் வழங்கப்பட்டன. இந்த 10 ஓட்டப் போட்டிகளானது சியெட் களனி நிறுவனத்துக்கும் SLAS நிறுவனத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் நடத்தப்படுகின்றன.

ரதெல்ல ஹில் கிளைம்ப், மஹகஸ்தொட ஹில் கிளைம்ப், எலியகந்த ஹில் கிளைம்ப், கண்டி இரவு நேர போட்டி, கொழும்பு இரவு நேர போட்டி, நுவர எலிய வீதிப் போட்டி, ரொதர்ஹேம் கடுகுருந்த, பன்னல பந்தய தளத்தில் மூன்று ஓட்டப் போட்டிகள் என்பனவற்றை இந்த உடன்படிக்கைகள் உள்ளடக்கியுள்ளன.

செயற்பாடுகளில் தனது நற்பெயரைக் கட்டி எழுப்பியுள்ள சியெட் இலங்கையில் மோட்டார் ஓட்டப் போட்டிகளுக்கு மிகப் பாரிய அளவிலான ஆதரவை வழங்கி வருகின்றது. மேலும் SLAS நடத்தும் பல வருடாந்த ஓட்டப் பந்தய நிகழ்வுகளுக்கும் பிரதான ஆதரவாளராக இருந்து வருகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி