ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 27
கர வருடம் ஆனி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JUNE 30, 2011
வரு. 79 இல. 153
 

கடினமான வாழ்க்கைப் பாதையில் தேவனுடைய கரம் பற்றி நடப்போம்!

கடினமான வாழ்க்கைப் பாதையில்
தேவனுடைய கரம் பற்றி நடப்போம்!

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ரோஜh மெத்தையில் உறங்குவது போன்ற பயனமல்ல. ரோஜh முட்களின் மேல் நடப்பதாகும். கடினமான பாதை வாழ்வாக இருக்க முடியாது.

பாவம் நிறைந்த இவ்வுலகில் ஒருவன் தேவனுக்குப் பயந்து உண்மையுள்ளவனாக இவ்வுலகில் வாழ விரும்பினால் உலகம் அவனைச் சும்மா விடாது. அவனை எப்பக்கத்திலும் நெருங்;கி நொறுக்கவே பார்க்கும். அதை கண்டு அவன் பின்வாங்கிப் போவானேயானால் அவனுக்குள் உண்மையான தேவ அன்பு இல்லையென்றே சொல்லலாம்.

கிறிஸ்தவ வாழ்;வின் கடினமான பாதையைக் கர்த்தரோடு சேர்ந்து கடந்து சென்றால் நாம் இலகுவாக அதனைக் கடந்து விடலாம்.

பவுல் கடினமான பாதையைக் கடந்து செல்ல வேண்டும் என்று ஆவியானவரால் அப்போஸ்தலர் உணர்த்தப்பட்டும் அவர் தன் காலடிகளைப் பின்நோக்கி நகர்த்தவில்லை. சவால்கள் ஒன்றையும் குறித்து நான் கவலைப்படேன் என் ஓட்டத்தை சந்தோ'த்தோடே முடிக்கவும் நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகின்றேன் என்றே கூறினார். இன்று எத்தனை ஊழியர்;கள் இல்லாது அழிந்தொழிந்து போனது.

செயற்பாடுளைக் கண்டதும் தடுமாறிப் போகுமளவுக்கு நம்மைப்படுத்திய பாடுகள் என்று கண்டவுடன் எதிர்கொள்ள முடியாமல் மாண்டு போனார்கள். . அல்லது இப்பாடுகள் நிறைந்த ஊழியம் தேவையில்லை என்று கை விட்டார்கள்.

தேவனுக்காக வாழ உன்னை ஒப்புக் கொடுத்திருக்கும் தேவபிள்ளையே, கிறிஸ்;துவின் சிலுவைப்பாடுளை நினைகூர்ந்து இந்நாட்களில், அவர் எமக்காய் பட்டபாடுகளையும் வேதனைகளையும் உண்மையாகவே உணர்ந்திருந்தால் அவருக்காக பாடு அனுபவிக்க இன்றே உன்னையும் ஒப்புக்கொடு.

எவ்விதமான கடினமான பாதையையும் ஆண்டவரே, உமக்காக நான் கடந்து செல்ல ஆயத்தமாய் இருக்கிறேன் என்று சொல்லி தேவனுக்கு ஊழியம் செய்து பார். தேவன் உன்னில் மகிழ்ந்திருப்பார்.

அநேக ஆத்துமாக்களை நீ தேவனுக்காகய் ஆதாயப்படுத்திக் கொள்வாய். உலகம் உங்களைப் பகைத்ததானால் உங்களைப் பகைப்பதற்கு முன்னமே அது என்னைப் பகைத்தது என்று இயேசு சொன்னார். ஆகவே, உலகத்தில் வரும் துன்பங்களைக் கண்டு நாம் ஏன் பதறிப்போக வேண்டும். கடினமான பாதையானாலும் தேவகரம் பற்றி நடக்கப் பழகிக்கொள்ளுவோம். அந்த கடினமே நமக்கு ஆசீர்வாதமாக மாறும்.

“”~~அன்பின் தகப்பனே, உம் அடிச்சுவட்டில் நானும் நடந்திட, என்ன இடர்வரினும் சோர்ந்திடாத ஆவியைத் தாரும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி